தேனி மாவட்டம் அம்மா இரு சக்கர வாகன வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைந்த உழைக்கும் மகளிர்கள் மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றி.
“ஆண்களுக்கு சரிநிகர் சமமாக பெண்கள் உயர வேண்டுமானால், அவர்கள் பொருளாதார ரீதியில் அதிகாரம் பெற்று, தமது சொந்தக் கால்களில் நிற்கும் வலிமையும், தன்னம்பிக்கையையும் பெற வேண்டும்” என்பதனை மாண்புமிகு அம்மா அவர்கள் கருத்தில் கொண்டு, எண்ணற்ற பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வந்தார்கள். அதன்தொடர்ச்சியாக மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழக அரசு புதியதாகவும் பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை தீட்டி அவர்களை பயன்பெறச்செய்து, பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றம் அடையச் செய்து வருகிறது.அதன்படி, பெண்சிசு கொலையினை தடுத்து, பெண் குழந்தைகளை பாதுகாத்திடும் பொருட்டு, தொட்டில் குழந்தை திட்டம், ஆண் குழந்தைகளை மட்டும் விரும்பும் மனப்போக்கை கட்டுப்படுத்தவும், சிறு குடும்ப முறையை ஊக்குவித்திடும் வகையிலும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், பெண் கல்வியை ஊக்கப்படுத்திடவும், ஏழ்மையின் காரணமாக பெண்களின் திருமணம் காலதாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காவும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் வழங்கும் திட்டம், கருவுற்ற காலங்களில் ஏற்படுகின்ற வருவாய் இழப்பினை ஈடு செய்திடும் பொருட்டு, கர்ப்பிணித்தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு, டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம், உழைக்கும் மகளிர்களின் வேலைச்சுமையினை குறைக்கும் வகையிலும், மகளிர்கள் பயணத்தின் போது ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் வகையில், உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசு ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.இத்திட்டங்களில் ஒன்றான உழைக்கும் மகளிருக்கு அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் உழைக்கும் மகளிர்களுக்கிடையே பெறும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) மூலம் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் வாகனத்தின் மதிப்பீட்டில் 50 சதவீத மானியம் அல்லது ரூ.25,000/- மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் கடந்த 2017-18-ஆம் நிதியாண்டு முதல் நடப்பு நிதியாண்டு வரை போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,689 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.4.22 கோடி மதிப்பீட்டிலும், கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,310 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.3.28 கோடி மதிப்பீட்டிலும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,311 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.3.28 கோடி மதிப்பீட்டிலும், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,182 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.2.96 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் 5,492 உழைக்கும் மகளிர்களுக்கு ரூ.13.74 கோடி மதிப்பிலான மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் தாங்கள் பெற்ற வரும் பயன்களை பெண்கள் தெரிவிக்கையில்,
போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தவப்பிரியா தெரிவிக்கையில், எனக்கு திருமணமாகி எனது கணவர் எதிர்பாரத விதமாக இறந்து விட்டார். தற்போது, நான் தையல் தொழில் செய்து அதில் கிடைக்ககூடிய வருமானத்தினை கொண்டு, எனது குடும்பத்தை பராமரித்து வருகிறேன். எனது தையல் தொழிலுக்கான பீஸ் துணிகள், இதர பொருட்களை வாங்குவதற்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று வருவதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்த சூழ்நிலையில், மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனத்திட்டம் குறித்து அறிந்து, அதற்கு விண்ணப்பித்தேன். இதன் மூலம் புதிய வாகனம் வாங்குவதற்கு ரூ.25,000ஃ- மானியம் கிடைக்கப்பெற்றது. இதனைக் கொண்டு, தொழில்ரீதியாக வெளியிடங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளது. மேலும், இவ்வாகத்தின் மூலம் தற்போது நல்ல முறையில் தொழில் செய்து அதிக வருமானம் கிடைக்கப்பெற்று வருகிறது. மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசு பெண்களின் நிலையை கருத்தில் கொண்டு, பெண்களுக்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி அவர்களது வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வைத்து வருகின்ற மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசிற்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் எனத்தெரிவித்தார்.
கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பம் நகராட்சியை சேர்ந்த வீரம்மாள் தெரிவிக்கையில்,
நான் ஜவுளி வியாபாரம் செய்து அதில் கிடைக்க கூடிய வருமானத்தினை கொண்டு, எனது குழந்தைகளை பராமரித்து வருகிறேன். ஜவுளி வியாபாரம் என்பதால் வெளியூர் மற்றும் வெளியிடங்களுக்கு பேருந்தின் மூலமாகவும், நண்பர்களுடைய இரு சக்கர வாகனத்தினை வாங்கி கொண்டும், சென்று வரவேண்டிய நிலை இருந்ததது. பேருந்தில் பயணம் செய்வதற்கு அதற்குரிய நேரத்தில் தான் பயணம் செய்ய வேண்டிய நிலையும் மற்றும் நண்பர்களுடைய இரு சக்கர வாகனத்தை கேட்டுக்கும் போது, அவர்களுக்கு இடையூறாக இருப்பதும் எனக்கு மிகவும் வருத்தமளித்து வந்தது. இந்தநிலையில் மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசின் அம்மா இரு சக்கர வாகனத்திட்டம் குறித்து பத்திரிக்கை வாயிலாக அறிந்தேன். சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை தொடர்பு கொணடு, அதற்கு தேவையான ஆவணங்களை வழங்கினேன். அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு, புதிய இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25,000/- மானியம் வழங்கினார்கள். இதன் மூலம் குறித்து நேரத்தில் வெகுதூரம் சென்று எனது தொழிலினை மேம்படுத்திட நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. என்னைப் போன்ற பெண்களின் நிலையை அறிந்து, தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு அம்மா அவர்கள் பல எண்ணற்ற திட்டங்களை தந்து எங்களது மனதில் வாழ்ந்து வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து மாண்புமிகு அம்மா அவர்கள் காட்டிய வழியில் செயல்பட்டு வரும் தமிழக அரசு பெண்கள் பயன்பெறும் வகையில், புதிதாகவும் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி பெண்களின் பாதுகாவலனாக திகழ்ந்து வருகின்ற மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசிற்கு வாழ்நாள் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்பதை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் எனத்தெரிவித்தார்.
மாண்புமிகு அம்மா அவர்களின் தமிழக அரசு இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், பெண்கள் பொருளாதாரரீதியாக எவரையும் சார்ந்து இருக்காமல், தன்சார்பு நிலையை அடைய வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் எண்ணற்ற பெண்கள் நலன் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக தமிழகம் திகழ்கிறது என்பதில் அய்யமில்லை என்பதே தேனி மாவட்ட பெண்மணிகளின் எழுச்சிமிகு கருத்தாகிறது.