திருவள்ளூரில் உள்ள ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட வீடு பழுது பார்க்க நிதி உதவி :
திருவள்ளூரில் உள்ள ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ‘கல்வியினை மையமாக கொண்ட குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தினை சில்ரன் பிலீவ் நிறுவனத்தின் உதவியுடன் 35 ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது.
அதன்படி பூண்டி ஒன்றியத்தில் கொரோனா தொற்று மற்றும் நிவர் புயலால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் இருளர் இன பழங்குடியினத்தைச் சேர்ந்த 251 குடும்பங்களுக்கு அரிசி,பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் அடங்கிய தொகுப்பினை ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து புயலால் மிகவும் அதிகமாக வீடு பாதிக்கப்பட்ட 97 குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும்,மிதமாக பாதிக்கப்பட்ட 52 குடும்பங்களுக்கு தலா ரூ.3,500 என மொத்தம் ரூ.6 லட்சத்தி 67 ஆயிரம் நிதியுதவியினை பாதிக்கப்பட்ட வீடுகளை பழுது பார்க்க திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் கலந்து கொண்டு ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் சில்ரன் பிலீவ் நிறுவனத்தின் உதவியுடன் வங்கி கணக்கு மூலம் வழங்கினார்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.