இந்தியாவிலேயே முதல் மற்றும் மிகப் பெரிய குழந்தையின்மைக் குறையுடையோருக்கான ஒயாசிஸ் மருத்துவமனை உருவாக்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் மற்றும் மிகப் பெரிய குழந்தையின்மைக் குறையுடையோருக்கான
ஒயாசிஸ் மருத்துவமனை உருவாக்கியுள்ளது
சர்வதேச பாலியல் மற்றும் இனப்பெருக்க நாளை முன்னிட்டு குழந்தையின்மைக் குறையுடையோருக்கான ஆதரவு இயக்கமான ‘நாம் கருவுறலாம்’ (#WeCanConceive) என்னும் பொதுமக்கள் விழிப்புணர்வு முயற்சி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டது. இந்தச் சமூக ஊடகத் தளம் குழந்தையின்மைக் குறைபாட்டைப் போக்கும் விதங்கள் குறித்த விழிப்புணர்வையும், ஆதரவையும் அக்குறைபாடுள்ள தம்பதியினருக்கு வழங்கும். மேலும் அந்தத் தம்பதியர் கருவுற்று,
மகப்பேறு முடியும் வரையிலான பயணத்தை வெற்றிகரகமாகக் கடந்துசெல்ல உறுதுணை புரியும்.
இது குறித்து
ஒயாசிஸ் ஃபெர்டிலிட்டி மருத்துவமனையின் மருத்துவப் பிரிவுத் தலைவர் மற்றும் கருத்தரிப்பு நிபுணர் டாக்டர். வசுந்தரா ஜெகன்னாதன் இது குறித்துக் கூறுகையில், “குழந்தையின்மைக் குறையுடையோர் பெரும்பாலும் இதுபற்றி பிறரிடம் விவாதிக்க இயலாமல் தனிமையில் தவிக்கின்றனர். குடும்பம் என்ற கட்டமைப்பை உருவாக்க அவர்கள் பல தடைகளைத் தாண்டியே வரவேண்டியுள்ளது. குழந்தையின்மைக் குறைபாடு குறித்த களங்கத்தையும், மௌனத்தையும் கலைவதே இந்த அமைப்பின் நோக்கம்” என்றார். மேலும் அவர் இந்தியாவில் ஆண்டுதோறும் கருத்தரிப்பு விகிதம் குறைந்து வருவதையும் புள்ளி விவரங்களுடன் சுட்டிக் காட்டினார்.