குடியாத்தம் நகர ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன மாநாடு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன மாநாடு நடைபெற்றது கடந்த 77 நாட்களாக தலைநகர் டெல்லியில் மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், உயிர்நீத்த விவசாய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும், தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசை கண்டித்து வேலூர் மத்திய மாவட்டம், குடியாத்தம் நகர, ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று பிற்பகல் 4 மணியளவில் குடியாத்தம் சித்தூர் கேட் மும்தாஜ் மஹாலில் கண்டன மாநாடு நடைபெற்றது. நிகழ்விற்கு குடியாத்தம் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.வீராங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி பர்வேஸ் நயீம், அல்பதா தப்ரேஸ், வட்டார தலைவர்கள் ஜோதி கணேசன், வாசு, தாமோதரன், லோகிதாஸ், விஜயகுமார், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.தேவராஜ் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்வில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார், சமூக ஆர்வலர்கள் நாட்டாம்கார் அக்பர், பழ.ராஜேந்திர பிரசாத், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆடிட்டர். கிருபானந்தம், மாநில பேச்சாளர் துரை.முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் திருமதி. தேவகிராணி, திருமதி. கிருஷ்ணவேணி, எம்.பி.பன்னீர்செல்வம், Ex.BDO கோவிந்தராஜ், மோர்தானா குபேந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்வில் பாஸ்கரன் PATC விஜயன், காமராஜ், ஊனை சேகர், தனசேகரன், செங்குட்டுவன், பெரிய தம்பி, உவைஸ் அஹ்மத், கோவிந்தசாமி, ராஜேந்திரன், ஜலந்தர், கன்னியப்பன், மாணிக்கவேலன், மகளிர் காங்கிரஸ் சரஸ்வதி, மகாலட்சுமி, சிவகாமி, அபிராமி உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் மாவட்ட துணைத் தலைவர் விஜயேந்திரன் நன்றியுரை கூறினார்.
நிகழ்வில் விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலியும், அவர்கள் திருவுருவ படங்களுக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.