ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினமான ஆகஸ்டு 25 – ந் தாம் நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள், ஆன்மிக சொற்பொழிவாளர்
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினமான ஆகஸ்டு 25 – ந் தாம் நாளை அரசு விழாவாக
கொண்டாடப்படும் என்று அறிவித்தமைக்காக, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் சகோதரரின்
மகன் திரு.புகழனார், சகோதரரின் மருமகள் திருமதி. ஏலவார் குழலி, வாரியார் சுவாமிகளின் அக்காள் பேரன்
சி.பி. பாபு மற்றும் குடும்பத்தினர் வேலூரில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை
சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர்
திரு. சேவூர் எஸ்.இராமச்சந்திரன் உடன் உள்ளார்.