தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் மீதான தாக்குதலைக் கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் …

Loading

திருச்சி; தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் மீது நடந்த கொலைமுயற்சி தாக்குதலை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் மாநில தலைவராக இருப்பவர் கண்ணபிரான். இவர் நேற்று திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லையில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உள்ளார். இவர் மீது வெடிகுண்டு வீச்சு நடைபெற்றது. இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த தாக்குதலை கண்டித்து திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் முத்துவேல் தலைமை வகித்தார். திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மல்லை சுரேஷ், புறநகர் மாவட்ட செயலாளர் சுதாகரன், மாநில துணைத் தலைவர் செல்வம், மகளிரணி மாநில ஒருங்கிணைப்பாளர் பரிமளா, லால்குடி ஒன்றிய செயலாளர் சரவணன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய பொருளாளர் சதீஷ், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் நிதிஷ், முசிறி நகர்மன்ற இளைஞரணி செயலாளர் ராம்ஜி, புறநகர் மாவட்ட பொருளாளர் நிமலன், ஆனந்த், லால்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரசாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத் தலைவர் கண்ணபிரானுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசுவை சந்தித்து மனு அளித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *