அதிமுக மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார் .
திருச்சி: அதிமுக மகளிரணி சார்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. திருச்சி தென்னூர் அண்ணா நகர் உழவர் சந்தை அருகே உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்துகொண்டு பெண்களுக்கு புடவை, உணவு, நோய் தடுப்பு மருந்து மாத்திரைகளை வழங்கினார். இந்த விழாவுக்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி தலைமை வகித்தார். இந்த விழாவில் துணைச் செயலாளர் வனிதா, டாக்டர் சுப்பையா பாண்டியன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், பூபதி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.