கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழ கூட்டம் நடந்தது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதி அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழ கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக் குழ தலைவர் ஜானகிராமன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலு வலர் அசோக் பாபு முன்னிலை வகித்தார். அலூவலக மேலாளர் மீரா கோமதி வரவேற்றார். கூட்டத்தில் நடை பெற்ற விவாதங்கள் பின் வருமாறு. சண்முகம். கவுன்சிலர் கேள்வி ? சாத்திப்பட்டு பகுதியில் ரேஷன் கடை கட்டிடம் பழதடைந்து உள்ளது. ஒரு சில ரேஷன் கடைகள் செயல்படாமல் மாற்று கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றன்ர். இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். என்று ஒன்றியக் குழ தலைவர் ஜானகிராமன் பதில் தெரிவித்தார். அருள் செல்வம் கவுன்சிலர் கேள்வி ? 2021 ஆம் ஆண்டுக்கான பொது நிதி மற்றும் 15 – வது திதிக்குழவின் நிதியை பெற்று அதனை அனைத்து கவுன்சிலர்களுக்கும் அடிப்படை பணிகள் செய்வதற்கு ஒதுக்க வேண்டும் என்றார். மேலும் கூட்ட அரங்கில் புரட்சியாளர் அம்பேத்கர் திரு உருவப்படம் வைக்க வேண்டும். எனவும் கவுன்சிலர்கள் வலியுறுத்தினார்கள்.மேலும் உமா துரைராஜ் கவுன்சியர் கண்டரக்கோட்டை. புலவனூர். ஊராட்சி உட்பட்ட கோரிக்கை மனு ஒன்றை வழங்கினார். கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.