Today Rasi Palan: இன்றைய ராசிபலன்கள் (08-02-2021)

Loading

சென்னை: சார்வரி வருடம் தை 26 ஆம் தேதி பிப்ரவரி 08, 2021 திங்கட்கிழமை. துவாதசி திதி இரவு 03.20 மணி வரை அதன்பின் திரயோதசி திதி. மூலம் நட்சத்திரம் பகல் 03.20 மணி வரை அதன் பின் பூராடம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் தனுசு ராசியில் பயணம் செய்கிறார். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் எச்சரிக்கையும் தேவை. சந்திரன் ஆதிக்கம் நிறைந்த திங்கட்கிழமையான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

மேஷம் – சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த தேவையற்ற பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

ரிஷபம் – சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்ப்பது உத்தமம். இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சற்று மந்த நிலை ஏற்படும். தேவையில்லாமல் மற்றவர்கள் மீது கோபப்படும் சூழ்நிலை உருவாகும்.

மிதுனம் – சந்திரன் இன்று ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திரன் பார்வை கிடைப்பதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். இன்று உறவினர்களால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கடகம் – சந்திரன் இன்றைய தினம் ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

சிம்மம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட கால தாமதமாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியிலிருந்து வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். சேமிப்பு உயரும்.

கன்னி – சந்திரன் இன்றைய தினம் நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வங்கி சேமிப்பு குறையும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் தேடி வரும். பிட்காயின் $27,000-ஐ கடந்தது, $200 முதலீட்டில் நாள் ஒன்றுக்கு $867 பெறுக Bitcoin Investment அமேசான் பங்குகளில் 200$ முதலீடு செய்து இரண்டாம் வருமானம் ஈட்டுங்கள்! Make Money சுப்பாண்டி மற்றும் பேராசிரியர் உடன் முதலீடு பற்றி எளிதாக தெரிந்து கொள்க Tata Mutual Funds

துலாம் – சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். தெய்வ வழிபாடு மன நிம்மதியை தரும்.

விருச்சிகம் – சந்திரன் இன்றைய தினம் இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை குறையலாம். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.

மகரம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். சகோதரர்களால் சண்டைகள் வரலாம். குடும்ப ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

கும்பம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் கைக்கு வந்து சேரும்.

மீனம் – சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். குடும்பத்தில் -சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடத்தில் நிம்மதி உண்டாகும். மேலதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *