விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன்களை ரத்து செய்வதாக, அனைத்திந்திய “அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் அறிவித்ததையொட்டி…
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன்களை ரத்து
செய்வதாக, அனைத்திந்திய “அண்ணா திராவிட முன்னேற்றக் கழக
இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சருமான
திரு. எடப்பாடி K.பழனிசாமி
அவர்கள் அறிவித்ததையொட்டி, அவரது
இல்லத்தில் மாண்புமிகு கதர் மற்றும்
கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் திரு. G. பாஸ்கரன் அவர்கள்
தலைமையில், சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியைச்
சேரந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் நேரில் சந்தித்து, தங்களது நெஞ்சார்ந்த
நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும், சிவகங்கை ஒன்றியம், காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த இலுப்பக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் திரு. சதாசிவம்
அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, தன்னை கழகத்தின் அடிப்படை
உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.