கோயம்புத்தூர் வணிக வரித்துறை அலுவலகத்தில் வணிகவரித்துறை கூடுதல் ஆணையாளர் திரு.சி.பழனி அவர்கள் வணிக பிரதிநிதிகள், பட்டய கணக்கர்கள் ஆகியோர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்ட மண்டல வணிக வரித்துறை அலுவலகத்தில் வணிகவரித்துறையின் கூடுதல் ஆணையாளர் திரு.பழனி அவர்கள், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் தொடர்பாக பட்டய கணக்காளர்கள், வணிகப்பிரதிநிதிகள், வரி ஆலோசகர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இவ்வாய்வுக்கூட்டத்தில் வணிக வரித்துறை இணை ஆணையர்கள் திருமதி.காயத்ரி கிருஷ்ணன் திரு.செ.ஞானகுமார், திரு.நுண்ணறிவு ஆகியோர் உட்பட, வணிக வரி கோட்ட துணை ஆணையர்கள், மற்றும் அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.