ஒதப்பை ஊராட்சி குளத்தில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்யும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா துவக்கி வைத்தார் :
திருவள்ளுர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியம், ஒதப்பை ஊராட்சி குளத்தில் மீன்வளத்துறை சார்பாக, மீன்குஞ்சுகளை இருப்பு செய்தல் திட்டத்;தில் மீன்குஞ்சுகளை இருப்பு செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா துவக்கி வைத்து பேசினார்.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை குளங்களில் மீன்குஞ்சு இருப்பு செய்தல் திட்டத்திற்காக ரூ.101 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதப்பை, மயிலாப்பூர் ஆகிய ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஊராட்சி குளத்தில் மீன்குஞ்சு இருப்பு செய்யப்பட்டது.
அதன்படி திருவள்ளுர் மாவட்டத்தில் ரூ. 1.50 இலட்சம் மதிப்பில் 15 ஹெக்டேர் பரப்பளவில் 75000-ம் மீன் விரலிகள், ஊராட்சிகளின் 7 பெரிய ஏரிகளில் இருப்பு செய்யப்படவுள்ளது. பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒதப்பை, அய்யநேரி பெரிய ஏரியில் இந்திய பெருங்கெண்டை வகைகளான கட்லா, ரோகு, மிருகால் ஆகிய நன்கு வளர்ந்த மீன் விரலிகள் இருப்பு செய்யப்பட்டது. சுமார் 20,000-த்திற்கும் மேற்பட்ட விரலிகள் ஒதப்பை மற்றும் மயிலாப்பூர் ஆகிய ஊராட்சிகளில் 7 செ.மீ. அளவு வளர்ந்த விரலிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் கூறினார்.இதில் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.