நடவடிக்கை எடுக்குமா? சென்னை மாநகராட்சி…
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா ? சென்னை ஆர்.கே.நகர் கொருக்குப்பேட்டை மண்டலம் 4. வட்டம் 41.சென்னை மாநகராட்சி சரகத்திற்கு உட்பட்ட எண்ணூர் மெயின் சாலையில் மழை நீர் வடிகால்வாய் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வரும் வியாபாரிகளால் ஏற்படும் விபத்துக்கள் E.H.எனும் எண்ணூர் நெடுஞ்சாலை வழியாக கண்டெய்னர் லாரி முதல் தண்ணீர் லாரி டேங்கர் லாரிகள் என கனரக வாகனங்கள் மற்றும் ஷேர் ஆட்டோ இருசக்கர வாகனங்கள் வரை அதிக அளவில் செல்வதுண்டு பொதுமக்கள் அதிகம் வசிக்கும் ஏரியா என்பதால் நடந்து செல்வதற்கு இந்த சாலையில் பயணிக்கின்றனர் ஆனால் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து பாஸ் ஃபுட் முதல் ஹோட்டல்கள், இருசக்கர வாகனங்கள் விற்பனை, ஆட்டோ சர்வீஸ் செட் .மற்றும் பிளைவுட் மரக்கடை வரைதொழில் செய்வதால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை.சில அரசியல் பிரமுகர் ஆதரவுடன் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்தி வருகின்றனர் இவர்களால் இந்த சாலையில் பல கோர விபத்துக்கள் நடந்துள்ளது இந்த ஆக்கிரமிப்பை அகற்றினால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு பாதையாகவும் விபத்துக்கள் குறைவாகும் இருக்கும் என்று இச்சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள் தங்களது இன்னல்களை வேதனையோடு தெரிவிக்கின்றன. நடவடிக்கை எடுக்குமா? சென்னை மாநகராட்சி…