திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் :
திருவள்ளுர் பிப் 04 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
மறியலில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்றும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், எம். ஆர்.பி., செவிலியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் முன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
==============================================================================