தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கரில் நெற்பயிர்களும் 1500 ஏக்கரில் உளுந்து பயிர்களும் பாதிக்கப்பட்டது…
தஞ்சாவூர் மாவட்டத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை மத்திய குழுவினர் ஆய்வு தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு சம்பா தாளடி நெல் சாகுபடி 3 லட்சத்து 37 ஆயிரம் ஏக்கரில் நடைபெற்றது.நெல் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் பருவம் தவறி பெய்த மழையால் தஞ்சை நாகை திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் சுமார் இரண்டரை லட்சம் ஏக்கரில் நெற்பயிர்களும் 1500 ஏக்கரில் உளுந்து பயிர்களும் பாதிக்கப்பட்டது இதனையடுத்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சக மண்டல மேலாளர் ரணஞ்சே சிங்,மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குநர் ஷுபம் கார்க், மீன்வள மேம்பாட்டுத் துறை ஆணையர் பால்பாண்டியன் உள்ளிட்ட மத்திய குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஆகியோர் காவாளிப் பட்டி நம்பிவயல் துறையூர் உள்ளிட்ட இடங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.