திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மீஷன் திட்டம் : அமைச்சர், ஆட்சியர் ஆகியோர் துவக்கி வைத்தனர் :
திருவள்ளுர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, கருணாகரச்சேரி மற்றும் நடுக்குத்தகை ஆகிய ஊராட்சிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் மீஷன் திட்டத்தினை தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் துவக்கி வைத்தனர்.அப்பொழுது அமைச்சர் கூறியதாவது :
மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும்; வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் திட்டம் 1801 குடிநீர் குழாய் இணைப்புகள் நிறைவடைந்த கருணாகரச்சேரி ஊராட்சயில் ரூ. 18.90 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் நடுகுத்தகை ஆகிய ஊராட்சியில் ரூ. 1.21 கோடி மதிப்பீட்டிலும் அனைத்து இல்லங்களிலும் துவக்கி வைக்கப்பட்டது.
ஆவடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13.50 இலட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் ஜல் ஜீவன் திட்டத்தில் அதிக அளவில் குடிநீர் இணைப்புகளை பெற்றது தமிழ்நாடு மாநிலம். நீர்வளம் மேலாண்மை அமைச்சகம் வாயிலாக தமிழ்நாடு மாநிலம் நீர் மேலாண்மை விருதினை பெற்றதற்கு நமது தமிழ்நாடு மாநிலம் நீர் மேலாண்மையை சிறப்பாக செயல்படுத்துவற்கு சான்றாக உள்ளது. மேலும், தமிழ்நாடு மாநிலத்தில் பல முக்கிய திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலை அமைக்கும் பணிகளில் குறிப்பாக வண்டலூர் முதல் மீஞ்சூர் வரை ரூ. 1050 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, செயற்பொறியாளர் எம்.செந்தில் குமார், பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம் ரவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
=================================================================================