நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா கொரோனா தடுப்பு செலுத்திக்கொண்டார்.
நீலகிரி மாவட்டம் உதகை சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் தனது உடல் வெப்பநிலை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டு நோய் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது தமிழக அரசு தெரிவித்துள்ள படி நீலகிரி மாவட்டத்தில் 16- 1-2021 அன்று கொரோனா தடுப்பூசி வழங்கும் சிறப்பு முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்துவதற்காக முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட 4800 நபர்கள் இணையதளத்தில் பதிவு செய்தார்கள். இதில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
இரண்டாம் கட்டமாக வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை சேர்ந்த முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து கோவின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்கள்.
ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பு செலுத்திய நபர்களுக்கு வருகிற 16- 2 -2021 அன்று இரண்டாம் டோஸ் செலுத்தப்படவுள்ளது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நேற்று உதகை சேட் நினைவு அரசு மருத்துவக் மகப்பேறு மருத்துவமனையில் நான் எனது உடல் வெப்பநிலை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை செய்து கொண்டு நோய் தடுப்பூசி செலுத்திக் கொண்டேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவீந்திரன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) பாலுசாமி, துணை இயக்குனர் (குடும்பநலம்)இரியன் ரவிக்குமார், அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.