திருவள்ளூர் அருகே அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி கைது : போலீசார் விசாரணை :
திருவள்ளூர் அடுத்த குமாரச்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மகன்கள் யோகன் தம்பி ஏசுவா ஆகிய இருவரும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குமாரச்சேரிக்கு வந்த அண்ணன் தம்பி இருவரும் வந்துள்ளனர்.
இதில் தம்பி ஏசுவாவுக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று வீட்டில் இருக்கும் போது அண்ணன் தம்பி இருவருக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கஞ்சா போதையில் இருந்த தம்பி ஏசுவா வீட்டிலிருந்த கத்தியை எடுத்து அண்ணன் யோகனை கத்தியால் கழுத்தில் பலமாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து அண்ணன் யோகன் இறந்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த மப்பேடு காவல் துறையினர் உயிரிழந்த யோகனின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கத்தி குத்தில் ஈடுபட்ட தம்பி ஏசுவாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் நடந்த தகராறில் தம்பியே அண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
=======================================================================