ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் மூலம் நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கல்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டம்,தொரடிப்பட்டு கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட கிராமங்களில்,மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறையின் இயக்குநர் திரு.ஞானசேகரன் அவர்களின் ஆணைப்படி, மண்டல இணை இயக்குநர் டாக்டர்.மனோகரன் அவர்களின் அறிவுரைப்படி,கோட்ட உதவி இயக்குநர் டாக்டர்.பெரியசாமி அவர்களின் வழிகாட்டுதல் படி,ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் வாயிலாக வாரம், ஆரம்பூண்டி,சேத்தூர், உப்பூர்,முண்டியூர், பன்னிப்பாடி,நத்தம்பள்ளி,மோட்டுவளவு,பட்டிவளவு ஆகிய கிராமங்களை சார்ந்த 80 பெண் பயனாளிகளுக்கு டாக்டர்.அ.செல்வம் அவர்கள் தலா 25 எண்ணிக்கை கொண்ட நாட்டின கோழிக் குஞ்சுகளை (31.01.2021) பயனாளிகளுக்கு வழங்கி,நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள் குறித்து பயனாளிகளுக்கு விரிவாக பயிற்சி வழங்கினார்,மேலும் பயிற்சி கட்டணமாக அரசு வழங்கிய தலா நூறு ரூபாயை ஒவ்வொரு பயனாளிகளுக்கும் வழங்கினார்…
இப்பணியில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெயக்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல்,வெள்ளிமலை கால்நடை மருந்தக எல்லைக்குட்பட்ட கிராமங்களை சார்ந்த 80 பெண் பயனாளிகளுக்கு டாக்டர்.வினோத்குமார் அவர்கள் தலா 25 நாட்டுக் கோழி குஞ்சுகளை வழங்கினார்,இந்நிகழ்வில் கால்நடை ஆய்வாளர் சக்திவேல், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் துரைசாமி,ஜெயராமன் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்…