பொருளாதார ஆய்வறிக்கை 2020-21: இந்தியாவின் மீட்டெழுச்சிக்கு மரியாதை.

Loading

பொருளாதார ஆய்வறிக்கை 2020-21: இந்தியாவின் மீட்டெழுச்சிக்கு மரியாதை

சுர்பி ஜெயின் & சோனாலி சவுத்ரி

பொருளாதார ஆய்வறிக்கை 2020-21, கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரில் நமது முன்களப் பணியாளர்களின் அயராத தீரத்துடன் கூடிய துணிச்சல் மற்றும் கருணையுடன் கூடிய இடையறாத தொண்டுக்கு தீவிர மரியாதை செலுத்துவதாக அமைந்துள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்தியதற்கும், துணிச்சலான, தொலைநோக்குடன் கூடிய சிறப்பான நடவடிக்கைகளால் பொருளாதாரத்தை மீட்டெடுத்ததற்கும் அங்கீகாரம் அளிப்பதாகவும் அது உள்ளது. வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்துக்கும் இடையிலான இருளில் இருந்து மீள, ஒவ்வொரு இந்தியரும் காட்டிய உறுதிப்பாட்டை விளக்குவதாகவும் ஆய்வறிக்கை இருந்தது. 2020-21-ன் முதல் காலாண்டில் 23.9 சதவீதமாக இருந்த சரிவிலிருந்து மீண்ட இந்தியப் பொருளாதாரத்தின் விரிதிறனை சர்வதேச நிதியம் ஐஎம்எப் உறுதிப்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகின் மிக விரைவான வளர்ச்சியை அடையும் நாடாக இந்தியா கணிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் என்ற நிலையில் இருந்து மீண்டு டெஸ்ட் தொடரில் அண்மையில் பெற்ற வெற்றிக்கு இந்திய கிரிக்கெட் அணி காட்டிய எழுச்சியைப் போல, இந்தியப் பொருளாதாரம் ‘வி’ வடிவ மீட்சியைப் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு முழுவதும் இந்தியா உலக தொற்றுக்கு எதிராக துணிச்சலுடன் போராடியது. தொற்றுக்கு எதிரான போராட்டமாக இருந்தாலும், பொருளாதார மீட்சியை உறுதி செய்வதாக இருந்தாலும், இந்தியா தனித்துவமான, மகத்தான விரிதிறனைக் காட்டியுள்ளது. இந்த விரிதிறனுக்கு நமது செயல்திறன் மிக்க நடைமுறைகள் காரணாமாகும். படிப்படியான பொது சுகாதார நடவடிக்கைகள், 80 கோடி பேருக்கு இலவச உணவுதானியங்களை உறுதி செய்தது ஆகிய முன்முயற்சிகள் இதில் அடங்கும். சமுதாய நிறுவன நிர்வாகத்துக்கு மிகவும் முக்கியமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அண்மைக் காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. நலிவடைந்த, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பணப்பரிவர்த்தனைகளுக்கு இது மிகவும் உதவியது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசங்களை அணிதல், கோவிட் விதிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவற்றின் மூலம் 137 கோடி இந்தியர்களும் காட்டிய ஒத்துழைப்பு, தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு வலிமையாக அமைந்தது.

பொருளாதார வளர்ச்சி, சமுதாய மேம்பாடு ஆகியவற்றுக்கான பாதையை வகுக்கும் திறமையான கொள்கை உருவாக்கத்தின் ஒருங்கிணைந்த பங்கை ஆய்வறிக்கை அங்கீகரித்துள்ளது. இரண்டாம் அலை தொற்றைத் தவிர்த்ததுடன், அச்சமற்ற கொள்கை வகுக்கும் உத்தியால் ஏற்பட்டுள்ள பொருளாதார உயர் நோக்கு வளர்ச்சி இந்தியாவை ஒப்புமை இல்லாத நாடாக மாற்றியுள்ளது. தொற்றுக்கு எதிராக, இந்தியாவின் தனித்துவமான பாதிப்பு வாய்ப்புகளுக்கு உரிய வகையில், மனிதகுலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கொள்கை முயற்சிகள், நிச்சயமற்ற நிலையிலிருந்து இந்தியா மீண்டு வரும் தன்னம்பிக்கையை அளித்தது. தொலைநோக்கிலான கொள்கையால் அதிகாரமளிக்கப்பட்ட இந்தியா, இந்தப் பிரச்சினையை, சுகாதாரம் மற்றும் பரிசோதனை கட்டமைப்புகளை வலுப்படுத்தி, வாய்ப்பாக மாற்றியது. இவ்வாறு மேற்கொண்ட முயற்சியும், பல்வேறு சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியதும், பொருளாதார ஆற்றலை வலுப்படுத்தி, நீண்டகால வளர்ச்சிக்கு பெரிதும் உதவின.

எந்த ஒரு நாட்டின் மேம்பாட்டுக்கும், கொள்கை வகுப்பதில் தெளிவான அணுகுமுறை அவசியமாகும். இது நிச்சயமற்ற, மாறி வரும் சூழலுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். அதிகரித்து வரும் நிச்சயமற்ற நிலை, விரைவான மாற்றத்துக்கு இடையே, ‘ ஜான் ஹை டு ஜஹான் ஹை’ மற்றும் தொற்று பரவலை முறியடிப்பது ஆகிய தெளிவான நோக்கம், வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்ததுக்கும் இடையே நிலவிய குழப்பத்தைப் போக்கியது. கொள்கை செயல்பாடுகள், மாறி வரும் சூழலுக்கு ஏற்ற நடைமுறைகளைப் பின்பற்றியது ஆகியவை இதில் அடங்கும். தொற்றின் பல்வேறு கட்டங்களுக்கு ஏற்ற வகையில் வகுக்கப்பட்ட கொள்கை, மக்களுக்கு தேவையானவற்றை வழங்கி, நிதி நீடிப்பை தொற்றுக்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுக்க உதவியது. படிப்படியான, சுமுகமான வழிமுறைகளும் இதற்கு உதவிகரமாக இருந்தது.

இந்தியாவின் தற்போதைய வளர்ச்சியை நோக்கிய நிலையில், கொள்கை வகுத்தலுக்கு மிக முக்கியமான நோக்கமாக, பொருளாதார வளர்ச்சி மீது தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என ஆய்வறிக்கை கூறுகிறது. தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், புதுமையான சிந்தனை, உரிய நேர ஒழுங்குமுறை ஆதரவு, கட்டுப்பாடுகளை விலக்குதல் போன்ற செயல்திறன் மிக்க கொள்கை வகுத்தலை வலுப்படுத்துதல் ஆகிய கூறுகளை வரையறுக்கும். சாதாரண மனிதனுக்கான பொருளாதார கூறுகளை முந்தைய ஆய்வறிக்கைகள் கொண்டிருந்தன. ஆனால், 2020-21 ஆய்வறிக்கை, இந்தியாவில் உள்ள மாநிலங்களின் தேவைகளுக்கான குறியீடாக கட்டமைக்கப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், மாநிலங்களின் தேவைகள் 2018-ல் முன்னேற்றம் கண்டுள்ளன என்பதை இது காட்டுகிறது. தண்ணீருக்கான அணுக்கம், வீட்டு வசதி, தூய்மை, மைக்ரோ சுற்றுச்சூழல் மற்றும் இதர வசதிகள் என ஐந்து பரிமாண வளர்ச்சியை இந்த முன்னேற்றம் கண்டுள்ளது. இக்கொள்கை, அண்மைக்காலத்தில் அனைவருக்குமான வளர்ச்சியாக பரிணமித்துள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை 2020-21, இந்திய சமுதாயம் மற்றும் பொருளாதாரத்தின் உள்ளார்ந்த அடிப்படை வலிமையைப் பறைசாற்றும் சான்றாக உள்ளது. எந்த துன்பத்தில் இருந்தும் இந்தியர்கள் மீண்டெழுந்து வருவார்கள் என்பதை விளக்கும் ஆழ்ந்த நம்பிக்கை உணர்வை ஆய்வறிக்கை உள்ளடக்கியுள்ளது.
கட்டுரையாளர்கள் பொருளாதார விவகாரத்துறைக்கான ஆலோசகர்கள். அவர்கள் தெரிவித்திருப்பது அவர்களது சொந்தக் கருத்து.
****

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *