இந்தியப் பொருளாதாரம் மற்றும் புத்தெழுச்சி பெறுவதற்கான மூன்று அம்சங்கள்
இந்தியப் பொருளாதாரம் மற்றும் புத்தெழுச்சி பெறுவதற்கான மூன்று அம்சங்கள்
துளசிபிரியா ராஜ்குமாரி & சஞ்சனா கட்யான்
நெருப்பில் கருகிய ஃபீனிக்ஸ் பறவை மீண்டெழுந்து, புதுவடிவத்துடன் புத்துயிர் பெற்றது. அதைப் போன்று, 2020-ம் ஆண்டு, முன்னுதாரணம் கூற முடியாத பெருந்தொற்று ஏற்படுத்திய மிக மோசமான பாதிப்பு, மனிதகுலத்தின் மனோ ஆற்றலை விரக்தி மற்றும் நிச்சயமற்ற நிலைக்கு சுருட்டித் தள்ளிய அதேவேளையில், மனிதர்களால் தீர்வுகாணக் கூடிய புதிய திறவுகோல்களுக்கு வழிகாட்டியதோடு, இந்தியாவின் பொருளாதார புத்தெழுச்சிக்கும் வழிவகுத்த ஃபீனிக்ஸ் ஆண்டாக அமைந்துவிட்டது.
கோவிட்-19 பரவிய விதம் மற்றும் அதன் தாக்கத்தால் தூண்டப்பட்ட இரட்டைத் தேவை மற்றும் வினியோக அதிர்ச்சி, பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் புவியியல் ரீதியான, சமூக – பொருளாதார பாதிப்புகள் அதிர்ச்சியுறத்தக்கவையாக இருந்தன. அத்தியாவசியமற்ற துறைகள், குறிப்பாக விருப்ப நுகர்வுக்கு ஆட்படக்கூடிய துறைகள் தடுக்க முடியாத அளவிற்கு, குரல்வளையை நெரிக்கக்கூடிய அளவிற்கு துளைத்தெடுக்கப்பட்ட போதிலும், விவசாயம் போன்ற அத்தியாவசியத் துறைகள் தொடக்கத்தில் தணிக்கக்கூடிய அளவிலான பாதிப்புகளுக்குஆட்பட்ட நிலையில், பின்னர், அத்தியாவசியமற்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாட்டுடன் கூடிய நடவடிக்கைகளின் மறைமுக விளைவு காரணமாக, நிலைமை சீரடையத் தொடங்கியது. 2020-21 பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, உள்நாட்டு மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து போன்ற இடுபொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய அளவிற்கும், அரிசி, கால்நடைத் தீவனங்கள் மற்றும் வாசனை திரவிய ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டன. 2021ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், சுருண்டுபோன மற்றும் பரந்துவிரிந்த உணவுப் பணவீக்கம் காணப்பட்டதுடன், அதிலிருந்து தப்பிக்க முடியாத நிலையும் உருவானது. எனினும், கோவிட்-19ஆல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மத்திய அரசால் உரிய நேரத்தில் விலக்கிக் கொள்ளப்பட்டதாலும், சாகுபடிப் பணிகள் தடையின்றி மேற்கொள்ளப்பட்டதாலும், வேளாண்துறை காப்பாற்றப்பட்டது.
உற்பத்தித் துறையில் ஏற்பட்ட பரவலான தேவையை சமாளிக்க முடிந்ததோடு, ஜவுளி, ஆடைத் தயாரிப்பு, நுகர்வோர் பொருட்கள், கணினி வன்பொருள், இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள் உள்ளிட்டவற்றைச் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் வினியோக பாதிப்பின் தாக்கம் ஊடுருவியது. எனினும், சுகாதார சேவைகளில் ஏற்பட்ட வளர்ச்சி, மருந்துத் தயாரிப்பு துறைக்கு ஊக்கமளித்ததுடன், நெருக்கடியான கலகட்டத்தில் வாய்ப்புகளை அதிகரித்தது. கட்டுமானம் மற்றும் ஆட்கள் தொடர்புடைய சேவைத் துறைகள், குறிப்பாக வர்த்தகம், சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறைகள், பெருந்தொற்று பாதிப்பால் கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவெளி காரணமாக பெரும் பாதிப்புக்கு ஆளாகின. சிமென்ட் மற்றும் இரும்புத் தொழிற்சாலைகள் போன்ற அடிமட்டத் தொழிற்சாலைகளின் தேவையும் குறைந்ததால், சுரங்கத் துறைக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டபோதிலும், சுரங்கப் பணிகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தின.
புவியியல் ரீதியான பெருந்தொற்று பரவலால் இந்தியாவில் ஏற்பட்ட அதிர்வலைகள், மாநிலங்களில் ஏற்கனவே இருந்த பொருளாதார பாதிப்புகளுடன் பின்னிப் பிணைந்தது. 2020-21 பொருளாதார ஆய்வறிக்கை, இந்த பாதிப்புகளை, மொத்த மதிப்புக் கூட்டப்பட்ட அதிர்வு மற்றும் தொழிலாளர் துறை அதிர்வுகளின் பிணைப்பாக சித்தரிக்கிறது. உற்பத்தித் துறையில் மிக அதிக பங்களிப்பை வழங்கி வந்த மாநிலமான மகாராஷ்டிரா, கோவிட்-19 தொற்று அதிகம் பாதித்த மாநிலமாகவும் இருந்ததால், சேவைத் துறைகளில் 56 சதவீத உற்பத்தியும், நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையில் 7.5 சதவீத பங்களிப்பையும் வழங்கி வந்த நிலையில், ஆட்கள் நேரடியாக பணியாற்றக்கூடிய துறைகளிலும், தொழிலாளர் சந்தையிலும் பாதிப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள், கட்டுமானத் தொழிலில் பெரும் பாதிப்புக்கு ஆளானதுடன், குஜராத் மற்றும் ஜம்மு & காஷ்மீரில் நிலவிய உற்பத்தி மந்தநிலை பொருளாதார மீட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. பஞ்சாபில் வேளாண் துறை சார்ந்த பணிகள் உத்வேகமடைந்த போதிலும், 62 சதவீத அளவிற்கு வேலைவாய்ப்புகளைக் கொண்ட வேளாண் அல்லாத பிற துறைகளில் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தில்லி மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்கள், சேவைத்துறை சார்ந்த முறைசாரா துறைகளில் பாதிப்பை சந்தித்தன. உத்தரப்பிரதேசத்தில் பரந்து விரிந்து காணப்படும் கட்டுமானம் சார்ந்த அமைப்புசாரா தொழில்கள் பாதிப்பை சந்தித்தன.
இந்தியப் பொருளாதாரத்தில் பெருந்தொற்று ஏற்படுத்திய முழு பாதிப்பும் இன்னும் அகன்றுவிடவில்லை என்றாலும், நாட்டின் பொருளாதாரம், மூன்று மட்டங்களில் பெரும் புத்தெழுச்சி பெற்றுள்ளது. முதலாவதாக, எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் வணிகர்களுக்கு, மத்திய அரசு உரிய நேரத்தில் வழங்கிய ஆக்கப்பூர்வ ஒத்துழைப்பு காரணமாக, உடனடி பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டு, உடனடி புத்தெழுச்சி ஏற்படுத்தப்பட்டது. இரண்டாவதாக, அளவிடப்பட்ட நிதி மற்றும் பணக்கொள்கையை முன்னிலைப்படுத்தியதால், புதிய சவால்களை எதிர்கொண்டு மீண்டெழக்கூடிய துறைகளில் சக்திவாய்ந்த எழுச்சி காணப்படுகிறது. மூன்றாவது மற்றும் மிக முக்கியமாக, பெருந்தொற்றை எதிர்கொள்வதற்காக, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்திய சுகாதார வசதி எழுச்சி, புதிதாகப் பிறந்த ஃபீனிக்ஸ் பறவை தப்பிப் பறப்பதற்கான முக்கிய வளர்ச்சி இயந்திரமாகத் திகழ்கிறது. புத்தெழுச்சிக்கான இந்த மூன்று முக்கிய அம்சங்களும், கட்டுப்படுத்த முடியாத மனித உணர்வுகளை சார்ந்திருப்பதோடு, ஒட்டுமொத்த மீட்சிக்கான வழிகாட்டும் அம்சங்களாகவும் திகழ்கின்றன.
*****