டாட்டா இன்டிகா கார் திடீரென இன்ஜின் பகுதியில் எச்சரிக்கை செய்த உடன் ஓட்டுநர் காரை நிறுத்தி பார்த்த பொழுது கார் மளமளவென எரிய தொடங்கியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே அரூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி சென்ற டாட்டா இன்டிகா கார் திடீரென இன்ஜின் பகுதியில் எச்சரிக்கை செய்த உடன் ஓட்டுநர் காரை நிறுத்தி பார்த்த பொழுது கார் மளமளவென எரிய தொடங்கியுள்ளது.
அங்குள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே தகவலறிந்து வந்த திருப்பத்தூர் தீயணைப்பு துறையினர் காரை தண்ணீரை பீச்சி அடித்து அணைத்தனர் அதற்குள் கார் முற்றிலும் எரிந்து கருகி சேதமடைந்தன. தகவல் அறிந்து வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்தில் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.