ஆத்தூரில் 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி; இலவச கண் பரிசோதனை முகாம்…
சேலம் மாவட்டம், ஆத்தூர், புதிய பேருந்து நிலையத்தில், 32வது சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஆத்தூர் காவல்துறை, நகர போக்குவரத்து காவல் மற்றும் குமார் கண் மருத்துவமனை சார்பில் பேருந்து மற்றும் இதர வாகன ஓட்டுநர்கள், காவலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை நடைபெற்றது. சாலை போக்குவரத்து பாதுகாப்பு மாத விழாவையொட்டி கடந்த சில தினங்களாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாகன ஓட்டுனர்களுக்கு கண் பார்வை அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள புறக்காவல் நிலையத்தில் பரிசோதனைை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான வாகன ஓட்டிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு கண் கண்ணாடியும் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாட்டினை மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவர் எம்.செல்வம் அவர்கள் செய்திருந்தார். சிறப்பு அழைப்பாளராக ஆத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் இமானுவேல் ஞானசேகர் அவர்கள் கலந்து கொண்டு முகாமினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். இதில் ஆத்தூர் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் உமா சங்கர், ஆத்தூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், ஆத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜ்குமார், உள்ளிட்ட காவலர்கள் மற்றும் ஆத்தூர் எலக்ட்ரிக்கல் ரவி, ஆத்தூர் சரவணா டி.வி.எஸ் மேனேஜர் P.சரவணன் ஆகியோர் இருந்தனர்.