திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பத்தில் உள்ள வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் :

Loading

திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் வரதராஜநகரில் உள்ள அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் ஜீர்னோதாரன மற்றும் பாலவிநாயகர், வல்ளி தேவசேனா முருகர், சாய்பாபா, காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, மற்றும் சண்டிகேஸ்வரர், மஹாவிஷ்ணு, பரிவார தேவதைகள், அஷ்டபுஜதுர்கை மற்றும் கால பைரவர் நவக்கிரக ஆலய நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கடந்த 25-ந் தேதி கணபதி ஹோமம் மற்றும் லட்சுமி நவக்கிரக ஹோமம் மற்றும 108 திரவ்ய ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கி நேற்று விக்னேஷ்வர பூஜை, புண்யாஹ வாசனம், மற்றும் இரண்டாம் கால யாகபூஜையும் நடைபெற்றது. அதனை் தொடர்ந்து மங்கள இசையுடன் 4-ம் கால யாகபூஜையும் தொடங்கி, வேதபாராயணமும், கணபதி ஹோமம், பூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடந்தேறியது.

பின்னர் புனித நீர் கலசப் புறப்பாடும் வரசித்தி விநாயகருக்கு கலச கும்பாபிஷேகமும் பூஜையுடன் தொடங்கி விமான கலசத்தில் புனித நீரை ஊற்ற கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் கோவில் நிர்வாகி திருமலை உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *