தீண்டாமை பழக்கத்தை மக்களிடமிருந்து நீக்கி சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டு அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட சமபந்தி விருந்தில் உணவு அருந்தினார்.
திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சமையல் கூடத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ஆண்டு தோறும் தீண்டாமை பழக்கத்தை மக்களிடமிருந்து நீக்கி சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்திற்காக மாவட்ட ஆட்சியர் பொன்னையா கலந்து கொண்டு அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்ட சமபந்தி விருந்தில் உணவு அருந்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.அ.முகமது ரசூல், திருவள்ளுர் வட்டாட்சியர் செந்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சரவணன்,காக்களூர் ஊராட்சி மன்றத் தலைவர் சுபத்ரா ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.