திருவண்ணாமலையில் நேதாஜி சிலை அமைக்க வேண்டும் மாநில பாஜக இளைஞரணி தலைவர் பேச்சு…
திருவண்ணாமலை. ஜன. 23
வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி பாஜக மாநில இளைஞரணி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சாலையில் . கீழ் செட்டிபட்டி அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர். பாலாஜி. மாவட்ட பொதுச்செயலாளர். ரமேஷ். கோட்ட பொறுப்பாளர். ரமேஷ். உட்பட 500க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் தலைமை வகித்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில இளைஞரணி தலைவர் கூறுகையில்,திருவண்ணாமலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு சிலை அமைக்க மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் தமிழை வளர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு தி.மு.க. எம்.பி .எம்.எல்.ஏக்கள். அனைவரும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் நடத்தி வருகின்றனர். அந்த பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படவில்லை இதன்மூலம் தி.மு.க.இரட்டை வேடம் போடுகிறது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. தமிழகம் முழுவதும் நேதாஜி சிலையை நிறுவ வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.
ஜெயலலிதா அறிவித்தது போல தமிழகத்தில் படிப்படியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அவர் தமிழக அரசை வலியுறுத்தினார்.