ஈரோட்டில் மனுநீதி திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு பயனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்…

Loading

ஈரோடு ஜனவரி 24
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மனுநீதி திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக நேற்று குமலன் குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் கலந்துகொண்டு 168 கோரிக்கைகளை பெற்றார் துறைரீதியாக பரிசீலனைக்கு உத்தரவிட்டார், 128 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வருவாய்த்துறை மூலம் 100 பயனாளிகளுக்கு தலா 12 ஆயிரம் வீதம் 12 லட்சம் ஓய்வூதியத் தொகை பெறுவதற்கான ஆணையினை வழங்கினார், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு பணி 2799 மதிப்பீட்டில் செயலிகள் உடன் கூடிய திறன்பேசி, ரூ 76 ஆயிரத்து 794 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது, சமூக நலத்துறை சார்பில்தலா ரூ 4500 வீதம் 16 பயனாளிகளுக்கு 86400 மதிப்பீட்டில் உதவிகள் வழங்கப்பட்டன ,சிறுபான்மை துறையினர் சார்பில் 6 பயனாளிகளுக்கு தலா 4900 மதிப்பில் விலையில்லா சலவை பெட்டி ரூ 29 400 மதிப்பீட்டில் வழங்கப்பட்டது மொத்தம் 128 பயனாளிகளுக்கு 13 ,92, 584 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் தென்னரசு, மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே வி ராமலிங்கம், மாநகராட்சி ஆணையர் மரு. இளங்கோவன், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், பெரியார் நகர் பகுதி கழக செயலாளர் மனோகர் ,,சிந்தாமணி கூட்டுறவு பண்டக சாலையின் தலைவர் ஜெகதீசன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *