நீலகிரி மாவட்டத்தில்‌ ஏழை, எளிய மக்களுக்கு உரிய நேரத்தில்‌ மருத்துவ சேவை கிடைப்பதற்கு முதலமைமைச்சர்‌ அவர்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள்‌ நெஞ்சார்ந்த நன்றி…

Loading

நீலகிரி மாவட்டத்தில்‌ ஏழை, எளிய மக்களுக்கு உரிய நேரத்தில்‌
மருத்துவ சேவை கிடைப்பதற்கு 28 இடங்களில்‌ முதலமைச்சரின்‌
அம்மா மினி கிளினிக்‌ ஒதுக்கீடு செய்து தந்த மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைமைச்சர்‌ அவர்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள்‌ நெஞ்சார்ந்த
நன்றி.

மாண்புமிகு அம்மா அவர்கள்‌, ஏழை, எளிய மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌
பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள்‌.மாண்புமிகு அம்மா அவர்களின்‌
நல்லாசியுடன்‌ செயல்படும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌
தலைமையிலான தமிழக அரசு தொடர்ந்து பல திட்டங்களை அறிவித்து அதன்‌ மூலம்‌
ஏழை, எளிய மக்களின்‌ வாழ்வாதாரம்‌ உயர்த்த வழிவகை செய்து வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட
மக்கள்‌ எங்கு அதிகமாக வாழ்கின்றார்களோ அந்த பகுதியில்‌ அம்மக்களுக்கு சிறந்த
மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்‌ என்ற உயர்ந்த நோக்கத்தோடு தமிழகம்‌
முழுவதும்‌ 2,000 முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்கை துவங்கப்படும்‌ என்ற
மகத்தான அறிவிப்பை வெளியிட்டார்கள்‌. இந்த அம்மா மினி கிளினிக்கில்‌, சர்க்கரை
பரிசோதனை, இரத்ததில்‌ கொழுப்பின்‌ அளவு, இரத்த மாதிரி பரிசோதனை
போன்றவைகளையும்‌ இங்கேயே எடுத்துக்‌ கொள்ளலாம்‌. உள்நோயாளியாக
சிகிச்சை எடுக்க வேண்டிய நிலையை தவிர, மற்ற எல்லா நோய்களுக்கும்‌ இங்கேயே
சிகிச்சை எடுத்துக்‌ கொள்ள முடியும்‌. குறிப்பாக கருவுற்ற தாய்மார்கள்‌ அனைவரும்‌
தாங்கள்‌ அடிக்கடி மேற்கொள்ளும்‌ பரிசோதனைகளை, அதாவது கருவிலிருக்கும்‌
குழந்தையின்‌ இதய துடிப்பினை பார்ப்பது உட்பட அடிப்படையான குழந்தையின்‌
செயல்பாடுகளை ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ சென்றுதான்‌ பார்க்க வேண்டும்‌
என்றில்லை, “அம்மா மினி கிளினிக்‌” மூலமே பரிசோதித்து கொள்ளலாம்‌.

இந்த முதலமைச்சரின்‌ “அம்மா மினி கிளினிக்‌” மூலம்‌ சர்க்கரையின்‌ அளவு,
இரத்த அழுத்தம்‌, சிறுநீர்‌ அல்பமின்‌, சளி பரிசோதனை, சிறுநீர்‌ மூலம்‌ கர்ப்பத்தை
உறுதி செய்தல்‌ போன்ற பரிசோதனைகளும்‌, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை,
புற நோயாளிகள்‌ தொடர்பான அனைத்து சிகிச்சைகள்‌, சிறு காயங்களுக்கான
சிகிச்சை, சளி, காய்ச்சல்‌, வயிற்று போக்கு போன்றவற்றிற்கான சிகிச்சை, கர்ப்பிணி
பெண்களுக்கான சிகிச்சை, வயது முதிர்ந்தோர்களுக்கான சிகிச்சை போன்ற
சிகிச்சைகளும்‌, சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள்‌, உயர்‌ இரத்த அழுத்தம்‌
மற்றும்‌ சளி காய்ச்சல்‌ போன்றவற்றிற்கான மருந்துகள்‌, சத்து மாத்திரைகள்‌, புற
நோயாளிகளுக்கான அனைத்து மருந்துகளும்‌ இங்கு கிடைக்கும்‌ வகையில்‌
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களால்‌ துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும்‌, முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்‌ காலை 8 மணி முதல்‌ 12
மணி வரையிலும்‌, மாலை 4 மணி முதல்‌ 7 மணி வரையிலும்‌ பேரூராட்சிகள்‌ மற்றும்‌
கிராமப்புறங்களிலும்‌, 4 மணி முதல்‌ 8 மணி வரையில்‌ மாநகராட்சி மற்றும்‌ நகராட்சி
பகுதிகளிலும்‌ செயல்படும்‌. இதில்‌ ஒரு மருத்துவர்‌, செவிலியர்‌ மற்றும்‌ மருத்துவ
பணியாளர்கள்‌ உள்ளனர்‌.

நீலகிரி மாவட்டத்தில்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்‌ 20
கிராமப்புறங்களிலும்‌, 5 நகர்புறங்களிலும்‌, 3 நடமாடும்‌ முதலமைச்சரின்‌ அம்மா மினி
கிளினிக்‌ என 28 முதலமைச்சரின்‌ அம்மா பினி கிளீனிக்‌ திறக்கப்படவுள்ளது. இதில்‌
தற்போது ஜெகதளா, எஸ்‌.கைகாட்டி, காந்தல்‌ ஆகிய 3 இடங்களில்‌ முதலமைச்சரின்‌
அம்மா மினி கிளினிக்‌ திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜெகதளா பகுதியில்‌ திறந்து
வைக்கப்பட்ட முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்‌ மூலம்‌ ஜெகதளா,
காரக்கொரை, ஆரோக்கியபுரம்‌ உள்ளிட்ட 7 கிராமத்தை சேர்ந்த 1,307 குடும்பத்தை
சேர்ந்த 4,491 நபர்களும்‌, எஸ்‌.கைகாட்டி பகுதியில்‌ திறந்து வைக்கப்பட்ட
முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்‌ மூலம்‌ எஸ்‌.கைகாட்டி, குயின்சோலை,
காக்காசோலை, ஓம்நகர்‌, பரவக்காடு உள்ளிட்ட 15 கிராமத்தை சேர்ந்த 1,650
குடும்பத்தை சேர்ந்த 5,350 நபர்களும்‌, உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தல்‌
பகுதியில்‌ திறந்து வைக்கப்பட்ட முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்‌ மூலம்‌
கைலாசம்‌ பிள்ளை தெரு, கீழ்‌ பள்ளிவாசல்‌, குமாரசாமி நகர்‌ உள்ளிட்ட 452
குடும்பத்தை சேர்ந்த 2,312 நபர்கள்‌ என மொத்தம்‌ 12,153 நபர்கள்‌ இதன்‌ மூலம்‌
பயன்‌ பெறுவார்கள்‌.

மேலும்‌ மீதமுள்ள 25 முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்குகள்‌
படிப்படியாக பொதுமக்களின்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்‌. இத்திட்டத்தின்‌
மூலம்‌ கிராமப்புறங்களில்‌ வாழும்‌ மக்கள்‌ வெகு தூரம்‌ செல்லாமல்‌ அவர்கள்‌
வசிக்கும்‌ பகுதிகளிலேயே சிகிச்சை பெற்றுக்‌ கொள்ள இத்திட்டம்‌ மூலம்‌ வழிவகை
செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்‌ மூலம்‌ பயனடைந்த பயனாளி
கூறுகையில்‌:

என்‌ பெயர்‌ நவனீதம்‌. நான்‌ காந்தல்‌ பகுதியில்‌ வசித்து வருகிறேன்‌ . எனக்கு
75 வயது ஆகிறது. எனது வயது முதிர்வு காரணமாக என்னால்‌ அதிக தூரம்‌ நடக்க
முடியாது. மருத்துவ பரிசோதனைக்காக உதகை தலைமை அரசு மருத்துவமனைக்கு
தான்‌ செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்பொழுது எங்கள்‌ பகுதியிலேயே
முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்‌ திறக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின்‌
அம்மா மினி கிளீனிக்‌ காலை 8 மணி முதல்‌ 12 மணி வரையிலும்‌, மாலை 4 மணி
முதல்‌ 7 மணி வரையிலும்‌ செயல்படுகின்ற காரணத்தினால்‌, இதன்‌ மூலம்‌
சிரமமின்றி மருத்துவமனைக்கு செல்லாமல்‌ எங்கள்‌ பகுதியில்‌ உள்ள கிளினிக்‌
மூலமாகவே மருத்துவ பரிசோதனை செய்து கொள்கிறேன்‌. அங்குள்ள மருத்துவர்‌,
செவிலியர்‌ என்னை நன்றாக பரிசோதித்து அதற்கு ஏற்ற மருந்துகளை
வழங்குகின்றனர்‌. பெரிய மருத்துவமனையில்‌ உள்ளது போல்‌ இங்கும்‌ அனைத்து
வசதிகளும்‌ உள்ளன. இது எனக்கு மட்டுமின்றி இப்பகுதி மக்கள்‌ அனைவருக்கும்‌
மிகவும்‌ உதவியாக இருக்கும்‌. மக்களுக்கு மிகுந்த பயனள்ள இந்த திட்டத்தை
வழங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த
நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என கூறினார்‌.

முதலமைச்சரின்‌ அம்மா மினி கிளினிக்‌ மூலம்‌ பயனடைந்த பயனாளி
கூறுகையில்‌:

நான்‌ காந்தல்‌ பகுதியில்‌ வசித்து வருகிறேன்‌. என்‌ பெயர்‌ மல்லிகா. எனக்கு
65 வயது ஆகிறது. நான்‌ எங்கள்‌ பகுதியில்‌ திறக்கப்பட்டுள்ள அம்மா மினி
கிளினிக்கிற்கு சென்று இரத்த அளவினை சரி பார்த்து கொண்டேன்‌. வேறு ஏதேனும்‌
பிரச்சனைகள்‌ உள்ளதா என்பதையும்‌ என்‌ உடல்‌ நிலை குறித்து மருத்துவர்கள்‌
விசாரித்து இரத்த அளவை சீராக சரி செய்ய மருந்துகள்‌ கொடுத்தனர்‌. அம்மா மினி
கிளினிக்‌ என்‌ வீட்டின்‌ அருகிலேயே உள்ளதாலும்‌ காலை 8 மணி முதல்‌ 12 மணி
வரையிலும்‌, மாலை 4 மணி முதல்‌ 7 மணி வரையிலும்‌ செயல்படுகின்ற
காரணத்தால்‌, எனக்கு மட்டுமின்றி எங்கள்‌ ஊர்‌ மக்கள்‌ அனைவருக்கும்‌ மிகவும்‌
பயனுள்ளதாக இருக்கிறது. இதற்கு முன்பு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்‌
என்றால்‌ அதிக தூரம்‌ பேருந்தில்‌ தான்‌ செல்ல வேண்டும்‌. இப்பொழுது அம்மா மினி
கிளினிக்‌ எங்கள்‌ பகுதியில்‌ அமைந்துள்ளதாலும்‌, அனைத்து வசதிகளும்‌
இருக்கின்ற காரணத்தால்‌ இந்த அம்மா மினி கிளினிக்‌ மருத்துவமனை எங்களது
மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும்‌ வகையில்‌ அமைந்துள்ளது. இப்பகுதியில்‌
அம்மா மினி கிளினிக்கை அமைத்து கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌
அவர்களுக்கும்‌, தமிழக அரசிற்கும்‌ இப்பபகுதி மக்களின்‌ சார்பாக மனமார்ந்த
நன்றியை தெரிவித்து கொள்கிறேன்‌ என கூறினார்‌.
மாண்புமிகு அம்மாவின்‌ அரசு கிராம புறங்களில்‌ வாழ்கின்ற ஏழை,
எளிய ஒடுக்கப்பட்ட மக்கள்‌ எங்கு அதிகமாக வாழ்கின்றார்களோ அந்த பகுதியிலே
அம்மக்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை செய்ய முதலமைச்சரின்‌ அம்மா மினி
கிளினிக்‌ என்ற அற்புதமான திட்டத்தை தொடங்கி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர்‌ அவர்களுக்கு நீலகிரி மாவட்ட மக்கள்‌ நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்து கொண்டனர்‌.

தொகுப்பு
நி.சையத்‌ முகம்மத்‌
செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌
ஓ.ர.மனோலன்‌ குமார்‌
உதவி மக்கள்‌ தொடர்பு அலுவலர்‌ (செய்தி)
நீலகிரி மாவட்டம்‌.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *