தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர்,
மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் திரு. ஒ. பன்னீர்செல்வம்
கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர்
திரு. எடப்பாடி K.பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில் இன்று
காலை (22.1.2021 – வெள்ளிக் கிழமை), மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக்
கழகச் செயலாளர்கள் பங்குபெற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அழைப்பாளர்கள் அனைவரும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக /
அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை
கடைப்பிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி ஏம்மா அவர்களின்
நினைவிட வளாகம் 27.1.2021 அன்று திறந்துவைக்க இருப்பதை முன்னிட்டு, அதற்கான
ஏற்பாடுகளை சிறப்பாக செய்வது சம்பந்தமாக, கழக ஒருங்கிணைப்பாளர்,
மாண்புமிகு தமிழ் நாடு துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை
ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழ் நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி
– ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள்.