10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு மாணவியர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் மாவட்டத்தில் அரசு வழிகாட்டி நெறிமுறைகளின் படி கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மாணவியர்கள், ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அருகில், சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன், முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி ஆகியோர் உள்ளனர்.