கடலூர் மாவட்டம் போக்குவரத்து காவல்துறை சார்பில் 32 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாத விழாவை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Loading

இப்பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ஸ்ரீ அபிநவ், IPS., அவர்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் கடலூர் நகரின் முக்கிய வீதிகளில் இருசக்கர வாகனத்தை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
இந்த சாலை விழிப்புணர்வு பேரணியை கடலூர் துணை காவல் கண்காணிப்பாளார் திருமதி K.சாந்தி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இப்பேரணியில் கடலூர் மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் இப்பேரணியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழாப்புணர்வை ஏற்படுத்தினார்கள். காவல் ஆய்வாளர் திரு.உதயகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply