கௌசிகன் ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டு கோவாவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.
சேலம் அம்மாபேட்டை என்ற ஊரில் வசிப்பவர் திருமதி.பானு அவர்கள் இவர் கணவனின் ஆதரவியின்றி தனது 8 வயது மகன் கௌசிகன் உடன் மிகுந்த சிரமத்திற்கு இடையே வாழ்ந்துவருகிறார்.இவரது மகன் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் கௌசிகன் ஸ்கேட்டிங் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டு கோவாவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.அதனை தொடர்ந்து இம்மாதம் 18 தேதி முதல்20 தேதி வரை நேபாளத்தில் நடைபெற்ற ஏழாவது இண்டோ நேபால் ருரல் இன்டர்நேஷனல் கேம்ஸ் 2020 -21 என்ற போட்டியில் கலந்துகொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார் .இந்த சிறுவனின் அரிய சாதனையை பாராட்டி அனைத்து இந்திய பத்திரிகைை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர் லயன் டாக்டர் எஸ்.இ ராஜேந்திரன் சார்பாக சேலம் செய்தியாளர் செந்தமிழ்த்தேனீீ அவர்கள் சாதனை படைத்த சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.