32வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர் இனிப்புகள் வழங்கினார்கள்.
சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் உள்ள நாட்டாண்மை கழக வளாகத்தில், போக்குவரத்துத் துறையின் சார்பில் 32வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் ஆகியோர் இனிப்புகள் வழங்கினார்கள். அருகில், மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சந்திரசேகரன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ராஜராஜன் (சேலம் மேற்கு),செல்வி.ஜெயகௌரி( சேலம் கிழக்கு),சரவணபவன் (சேலம் தெற்கு),ரகுபதி (ஆத்தூர்) ஆகியோர் உள்ளனர்.