கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மக்கள் தங்களின் புகாரை மாநகராட்சி ஆணையர் அவர்களுக்கு நேரடியாக தெரிவிக்கும் வண்ணம் மாநகராட்சி சார்பாக WHATSAPP புகார் எண் 9487038984 கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

அதன்படி பொதுமக்கள் தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் விநியோகம், பொது சுகாதாரம் , சாலை வசதிகள் , வரி இனங்கள் குறித்த புகாரை தெரிவித்து வருகின்றனர், கடந்த 6 மாதங்களில் இதுவரை 1386 புகார்கள் வரபெற்றதில்1292 புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளது, ஏனைய புகார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும் புதிய சொத்து வரி மற்றும் பெயர் மாற்றம் விண்ணப்பம் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இது சம்மந்தமாக புகார்கள் இருப்பின் WhatsApp எண் 9487038984 தெரிவிக்கலாம். அதுபோல பொதுமக்கள் தங்களின் வரியினை செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து வரிவசூல் மையங்களும் மார்ச் 31 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனவும்,
அனைத்து மையங்களிலும் கிரெடிட் கார்ட் ,டெபிட் கார்ட் மற்றும் அமேசான் பே மூலமாக பணம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரி வசூல் மையங்கள் தொடர்பான ஏதேனும் புகார்கள் இருப்பினும் வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்….