பாலக்கோடு அருகே ஸ்ரீ சக்தி பொப்பிடி சின்னக்கா கோவில் திருவிழா…
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எர்ரண அள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீ சக்தி பொப்பிடி சின்னக்கா கோவில் திருவிழா ஒவ்வொரு வருடமும் தை மாதம் பொங்கலை முன்னிட்டு கொண்டாடுவது வழக்கம் குழந்தை இல்லாதவர்கள் ஸ்ரீ சக்தி பொப்பிடி சின்னக்கா அம்மனை வழிபட்டால் குழந்தை வரம் அளிப்பதாக நம்பிக்கை உள்ளது
இக் கோயில் சுற்றியுள்ள கிராமங்களான பொப்பிடி, சென்னப்பன் கொட்டாய், பூனையன் கொட்டாய், குப்பன் கொட்டாய், கூசுக் கல், சாமியார் நகர், காவேரியப்பன் கொட்டாய், ரெட்டியூரான் கொட்டாய், நிலகுண்ட அள்ளி, முத்து கவுண்டன் காடு உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஒன்றினைந்து அம்மனுக்கு மாவிளக்கு, கரகம், பால்குடம் எடுத்து அலகு குத்தி தாரை தப்பட்டையுடன் 3. கி.மீட்டர் தூரத்திற்க்கு ஊர்வலமாக எடுத்துவந்து அம்மனை வழிபட்டனர் இதில் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர் இத்திருவிழாவானது கடந்த 14ம் தேதி காப்புக் கட்டுதலுடன் துவங்கி இன்று அதிகாலை முதல் பல்வேறு திரவியங்களுடன் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபராதனை காட்டப்பட்டது இதனை 3000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர், பக்தர்கள் அணைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இன்று மாலை சாமி வீதி உலாவுடன் நிறைவுற்றது இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.