மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுபிடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

Loading

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதிகளில் மஞ்சுவிரட்டு எனப்படும் மாடுபிடி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது .இதன் ஒரு பகுதியாக பெலமாரஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. முன்னதாக கிராம மக்கள் மேளா தாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீர் காளைகளின் மேல் தெளித்த உடன் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட காளைகள் வாடிவாசல் வழியாக ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டன.சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர் இதனை காண 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்து கண்டு களித்தனர், மாரண்டஅள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் எந்த ஒரு அசம்பாவிதமும் நிகழாமல் மஞ்சு விடும் நிகழ்ச்சி நடந்து முடித்தது.

மேலும் மாடுகள் ஓடும் பொழுது பார்வையாளர்கள் மீது பாயாமல் இருப்பதற்காக பாதையின் இரண்டு பக்கமும் தடுப்புகள் கட்டப்பட்டு மாரண்டஅள்ளி காவல்துறையால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *