மதுரையில் பாதுகாப்பு அதிகாரிகளை வரவிடாமல் மக்களுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல்காந்தி…

Loading

மதுரை,
தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாப்பது தனது கடமை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜன.,13ம் தேதி மதுரை வந்தார் ராகுல். நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் நடந்த நடந் ஜல்லிக்கட்டை சுமார் 45 நிமிடங்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தார். ஏற்கனவே விழா மேடையில் அமர்ந்திருந்த தி.மு.க., இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி, ராகுலுடன் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் சில நிமிடங்கள் உரையாற்றினார்.

மலைக்க வைக்கும் தமிழர் கலாச்சாரம்

அப்போது பேசிய அவர், ஜல்லிக்கட்டை நேரில் பார்த்தது தனக்கு ஒரு அழகான அனுபவமாக இருந்தது என்றும் ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கும் அதில் ஆர்வமுடன் பங்கெடுத்த வீரர்களை பார்ப்பதற்கும் மகிழ்ச்சியாக உள்ளது. மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்படிருந்ததாகவும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தி வருவதாகவும் பாராட்டு தெரிவித்தார்.
தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை நேரில் பார்ப்பதற்காக தான் தாம் ஜல்லிக்கட்டை காண வந்ததாகவும் தமிழகமும், தமிழ் கலாச்சாரமும் இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமானது எனக் கூறினார். மேலும், தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தனக்கு உள்ளதாக கூறினார்.
மக்களோடு மக்களாக
மதுரை மாவட்டம் தென்பழஞ்சியில் மக்களோடு மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
எப்போதும் தன்னை சுற்றி நிற்கும் பாதுகாப்பு அதிகாரிகளை இன்று சற்று தள்ளியே வைத்திருந்தார் ராகுல். இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் மட்டுமின்றி பொதுமக்களும் எளிமையாக ராகுலை சந்திக்க முடிந்த காட்சிகளை மதுரையில் காண முடிந்தது.
பந்தா இல்லை
அதன்பிறகு தென்பழஞ்சி சென்றார். அங்கு காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கல் வைக்கும் முறையை கவனித்தார். மக்களுடன் மக்களாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். இதனால் மகிழ்ச்சியடைந்த தென்பழஞ்சி கிராம மக்கள் ராகுல்காந்தியுடன் அமர்ந்து ஒன்றாக சாப்பிட போட்டி போட்டனர்.
ராகுலுடன் இளைஞர்கள் செல்பி
ராகுலின் இந்த எளிமையைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள் அவருடன் செல்பி எடுக்க விரும்பினர். இதை அறிந்த அவர் ஏராளமான இளைஞர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். ராகுல் புகழாரம் ராகுல்காந்தியின் இந்த எளிய அணுகுமுறையை கண்ட பொதுமக்களும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளும் இந்தளவுக்கு அவர் எளிமையான மனிதராக இருப்பார் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என கூறினர்.
விமான நிலையத்தில் ராகுல்:
டில்லி மதுரை விமானம் நிலையம் வந்த ராகுல் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டை நேரில் பார்த்த பின் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை, வீரர்கள் தான் காயம் அடைகின்றனர் என்பது தெரிகிறது. தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, வீரத்தை வெளிப்படுத்துகிறது.
விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு டில்லியில் அவர்கள் நடத்தும் போராட்டத்தை மத்திய அரசு அழிக்க சதி செய்கிறது. மோடியின் 3 நண்பர்களுக்காக விவசாயத்தையே அழிக்க நினைக்கிறது மத்திய அரசு. விவசாயிகளின் நிலங்கள், அவர்கள் விளைவித்த பொருட்களை எடுத்து நண்பர்களுக்கு கொடுக்க பிரதமர் மோடி முயற்சிக்கிறார். அவர்களுக்காக 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளை ஒடுக்க நினைக்கிறார் மோடி.
அவர் நாட்டு மக்களுக்க பிரதமர் அல்ல. அந்த 3 நண்பர்கள் தான் முக்கியமானவர்கள் என நினைக்கிறார். இந்தியாவிற்குள் சீனா தொடர்ந்து ஊடுருவிக் கொண்டே வருகிறது. இதுகுறித்து பதில் அளிக்காமல் பிரதமர் மோடி மவுனம் காக்கிறார். இந்த மவுனம் ஏன் என்பது தான் என் கேள்வி, என கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *