சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதியை ஆணையாளர் வழங்கினார் .
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், மாதந்தோறும் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், அலுவலகத்தை சுத்தமாக பராமரித்தும், கோப்புகளை சரியாக கையாண்டும் சிறந்த முறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை, கூடுதல் ஆணையாளர் தலைமையிடம், இணை ஆணையாளர், துணை ஆணையாளர் அமைச்சுப்பணி அதிகாரிகள் கொண்ட குழுவினர் மூலம் மாதந்தோறும் தேர்வு செய்து காவல் ஆணையாளர் தலைமையில் பண வெகுமதி மற்றும் சுழற்கேடயங்கள் வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் காலை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடந்த டிசம்பர் மாதம்- 2020ல் பணியிட அலுவலகத்தை தூய்மையாக பராமரித்து சிறப்பாக கோப்புகளை கையாண்டு பணிபுரிந்த Contingent-2 அலுவலக கண்காணிப்பாளர் 1.திருமதி.கனகதுர்கா,2. உதவியாளர் திருமதி .C.செல்வராணி ஆகியோருக்கு முதல் பரிசாக ரூபாய்.2000/- மற்றும் வெற்றியாளருக்கான சுழற்கோப்பையை வழங்கினார்.
2வது பரிசிற்காக பொது பிரிவு-1 அலுவலகத்தை தேர்வு செய்து கண்காணிப்பாளர் 1.திரு.C.பாஸ்கரன், இளநிலை உதவியாளர் திரு.சிவபிரகாஷ் ஆகியோருக்கு ரொக்கப்பரிசாக ரூபாய் 1,000/- மற்றும் சுழற்கோப்பை வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் திரு.k.ஶ்ரீதர்பாபு, (நுண்ணறிவுப்பிரிவு) திரு.பெரோஸ்கான் அப்துல்லா (நிர்வாகம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.