குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு…
ஈரோடு
குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்றது
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர்.ஆனந்த் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சி. கதிரவன் முன்னிலையில், அனைத்துத்துறை அலுவலர்களுடனான குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசுகையில்:_
குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் மாநிலத்தில் ஈரோடு மாவட்டம். முன்னணியாக திகழ்கிறது, குழந்தை திருமணத்தை பொறுத்தவரை புகார் கிடைக்க பெற்ற உடன் நடவடிக்கை எடுப்பதில் ஈரோடு மாவட்டம் மிக சிறப்பாக செயல்படுகிறது குழந்தை தொழிலாளர்கள் நலன் பாதுகாக்க தேசிய குழந்தைகள் ஆணையம் சார்பாக அனைத்து மாநிலங்களும் கண்காணிக்கப்படுகிறது புகார் பெறப்பட்ட அனைத்து முதல் தகவல் அறிக்கை வழங்கப்பட்டு 75 சதவீத வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளது குழந்தைகள் போதைமருந்து கலாச்சாரம் முற்றிலுமாக அகற்றுவதற்கு மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருவதாகவும் இந்தியா முழுவதும் 1600 மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார், மாவட்டத்தில் தனிக்குழு 4 இடங்களில் அமைக்கப்படும் என்றார் நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் டி தங்கதுரை ,பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.