திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் புதியதாக ஆவின் பால் பூத் கட்டப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பஸ் நிலையத்தில் புதியதாக ஆவின் பால் பூத் கட்டப்பட்டு வருகிறது.இதனால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இதன் காரணமாக பஸ்கள் திரும்பி செல்ல முடியாத நிலையில் ஏற்படுவதாகவும், மேலும் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அப்பகுதியில் வசிக்கும் சமூக சேவகர் சாமிநாதன் என்பவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட இடத்தில் ஆவின் பால் பூத்தை அமைக்க வேண்டாம் என்று கண்ணமங்கலம் விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்.
மாறன்,கண்ணமங்கலம் ஆட்டோ சங்கத் தலைவர்.முருகேசன், ஆரணி விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளர்.
மணிராஜ் ,ஜெயராஜ். .புரட்சிமணி. தினகரன் மற்றும் பொதுமக்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம்கோரிக்கை மனு அளித்தனர்.