கிரிவலப் பாதையில் பக்தரிடம் வழிப்பறி இருசக்கர வாகனத்தில் சுற்றும் திருடர்கள்…….

Loading

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் சேர்ந்த சந்தானம் அவரது மகன் சக்திவேல் என்பவர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார் . அவரது மனுவில் கூறியிருப்பதாவது. கடந்த 54 நாட்களாக 108 நாள் கிரிவலபாதை சுற்றும் ஆன்மிக பயணமாக திருவண்ணாமலை வந்துள்ளேன் கடந்த வெள்ளிக்கிழமை 8,1, 2021, அன்று கிரிவலம் சுற்றி வந்தேன் அப்பொழுது இரவு 11. 15 நிமிடம் அளவில் சின்னக்கடை வீதி துர்க்கை அம்மன் கோவில் முன்பாக வந்து கொண்டிருந்தபோது என்னை பின்தொடர்ந்து என் பின்னால் இருசக்கர வாகனத்திலும் மற்றும் ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் என்னிடம் இருந்தகைபேசியை பிடுங்கி சென்றுவிட்டார்கள்.உடனடியாக அவர்களை விரட்டி பிடிப்பதற்குள் வேகமாக அவர்கள் வாகனத்தில் ஓடிவிட்டார்கள். அந்த நேரத்தில் ரோந்து பணியில் இருந்த திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய.காவலர் சரவணன் என்பவரிடம் சம்பவம் பற்றி சொன்னவுடன் மிகவும் விரைவாக மேற்படி நபர்கள் பற்றி அடையாளங்களையும் அவர்கள் சென்ற திசையும் கேட்டு தெரிந்து கொண்டார் பின்னர் அவர் வேகமாக சென்றார்சம்பந்தப்பட்ட காவலர் மேற்படி நபர்களை விரட்டி பிடித்து அவர்களிடம் உள்ள எனது கைபேசியை கைப்பற்றினார். மேலும் விசாரணைக்கு முற்படும்போது மேற்படி இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்கள் காவலர் பிடியிலிருந்து தப்பி சென்றதாக அவர் தெரிவித்தார்.மேற்படி காவலரின் துரித செயலால் எனது உடமை சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் எனக்கு கிடைக்கப் பெற்றது இதுபோன்ற காவலர்களால் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு அரசு மீதான மரியாதையை மேலும் மேலும் உயர்கிறது, மேலும் இந்த கோரிக்கை மனு நான் தங்களுக்கு எழுதும் நோக்கம் காவலர் செயல் போற்றுவதற்கு உரியது மற்றும் பாராட்டுதலுக்குரியது, மற்றும் தாங்கள் ஆளுகைக்கு உட்பட்ட திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் என்போன்ற வெளியூர்களில்லிருந்து வரக்கூடிய லட்சக்கணக்கான பக்தர்களிடம் இரவு நேரங்களில் கிரிவல பாதையில் தொடர்ந்து இதுபோன்ற வழிப்பறி நடக்கிறது மேற்படி கிரிவலப்பாதையில் தீவிரமான ரோந்து பணியை மேற்கொள்ளவும், அதற்கானமாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி ஆன்மீகப்பயணம் திருப்திகரமாக அமையும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறியீடு உள்ளது.பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது இந்த புகாரை மாவட்ட ஆட்சியர் ஏற்றுக் கொண்டுஉரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கையுடன் திரும்பிச் செல்கிறேன் என்றார்.
Attachments area

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *