மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் மதுரையில் நடிகை குஷ்பு பேட்டி…
மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயார் மதுரையில் நடிகை குஷ்பு பேட்டி
மதுரையில் நேற்று பா.ஜ.க., மகளிர் அணி சார்பில் நடந்த “நம்ம ஊரு பொங்கல் விழா” நிகழ்ச்சியில் அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் குஷ்பு கலந்து கொண்டு பொங்கல் வைத்து, கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.பின்னர் குஷ்பு கூறியதாவது: தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதாவின் கொடி பறக்கிறது. எங்களின் வெற்றி உறுதியாகி உள்ளது. நாங்கள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவது 100 சதவிகிதம் உறுதி. நான் அடிக்கடி மதுரை வந்து செல்வதால் நான் மதுரையில் போட்டியிடுவேன் என்று கேட்கிறார்கள். அப்படி எதுவும் இல்லை.பா.ஜ.க., தலைமை கட்டளையிட்டால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளேன்.தமிழகத்தில் பா.ஜ.க., எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பது பற்றி மேலிடத் தலைவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்
உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி முக்கிய தலைவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசி வருகிறார். அரசியலில் தரக்குறைவான பேச்சுக்கள் தவிர்க்கப்படவேண்டும். இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் கொடுப்பது தொடர்பாக கமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்தை நான் எதிர்க்கவில்லை.பொள்ளாச்சி சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும்.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முன்னிட்டு தியேட்டர்களில் 100 சதவீத அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது நடிகர் விஜய்க்கு எதிரான செயல்பாடு அல்ல. இதனை யாரும் அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது. விஜய் படத்துக்கு தடை போடுவதாக யாரும் நினைத்துவிடக்கூடாது. ரஜினி கட்சி தொடங்க வில்லை. நான் ஏன் அவரிடம் ஆதரவு கேட்க வேண்டும். யாருடைய குரலும் எங்களுக்கு அவசியமில்லை.
எங்களுக்கு மோடி குரல் மட்டும் போதும்.தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் இப்போது பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுகிறார். நான் தி.மு.க.,வில் இருந்தபோது சிலர் என் வீடு மீது கல்வீசி தாக்கினர். நான் அவரை சந்திக்க முயன்ற போது பார்க்க முடியாது என்று ஸ்டாலின் மறுத்துவிட்டார். அவருக்கு பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச அருகதை இல்லை.பாஜகவில் பெண்கள் அதிக அளவில் உள்ளனர். எங்கள் கட்சியை பொறுத்தவரை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று மோடி பல இடங்களில் உறுதிபடுத்தியுள்ளார். ஸ்மிருதி ராணி, நிர்மலா சீத்தாராமன் ஆகியோர் முக்கிய பதவிகளை அலங்கறிந்துத்து வருகின்றனர்.திருமாவளவனுக்கு சர்ச்சையாக பேசுவது மட்டும் தான் வேலை என்றார். பேட்டியின்போது மாநில பொது செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் கே.கே.சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.