திருவண்ணாமலையில் உலக சாதனை செய்த 4 வயது சிறுவனுக்கு கலெக்டர் பாராட்டு
திருவண்ணாமலையை சேர்ந்த டாக்டர் ராஜா ஹரி கோவிந்தன்- டாக்டர் யமுனா ஆகியோரின் மகன் தர்ஷன்(வயது4).
யு.கே.ஜி. படிக்கும்.மாணவர்.இவர் சமீபத்தில் தக்காளி மற்றும் முட்டையில் அமர்ந்து பல்வேறு யோகாசனம் செய்து உலக சாதனை படைத்தார்.
அவரது சாதனையை அங்கீகரித்து யுனிவர்சல் புக் ஷாப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ். மற்றும் பரிசுகோப்பைகளை அனுப்பி உள்ளது.அதனை பெற்று கொண்ட தர்ஷன் தனது பெற்றோருடன் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை. சந்தித்து சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பையை அளித்தார்.அதனை பார்வையிட்ட கலெக்டர் உலக சாதனை படைத்த சிறுவன் தர்ஷனை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.அப்போது தொழிலதிபர் எஸ்.தங்கவேல் மற்றும் ஸ்ரீரெங்கன்,ஹனீஸ்குமார்,யோகா ஆசிரியை கல்பனா ஆகியோர் உடன் இருந்தனர்.