தம்மநாயக்கன்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் மற்றும் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தம்மநாயக்கன்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேலம் புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழ்நாடு மாநில மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் மற்றும் வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் மனோன்மணி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். மேலும் தம்மநாயக்கன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,கர்ப்பிணி பெண்களுக்கு தாய் சேய் நல பெட்டகம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்,தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், சேகோ சர்வ் தலைவர் தமிழ்மணி, பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய பொருளாளர் சேகர், ஊராட்சி மன்ற தலைவர் தங்காள் சேகர், பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் யூசுப், பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் பூங்கொடி சிவராஜ், மகளிர் அணி ஒன்றிய துணைத்தலைவர் ஜானகி, கிளைக் கழக அவைத்தலைவர் ராசப்பன் மற்றும் முருகன், ஜெயகாந்தன், முனுசாமி, கருப்பண்ணன், அருள்மொழி, அய்யன்னன், வைமணி, அசோகன், ரேடியோ முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்