சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த வியாசர்பாடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை, வியாசர்பாடி, சுந்தரம் பவர்லைன் 4வது தெரு, எண்.21 என்ற முகவரியில் வசித்து வரும் சங்கீதா, வ/27, க/பெ.சார்லஸ் என்பவர் கடந்த 20.12.2020 அன்று தனது வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பீரோவில் வைத்திருந்த 1 ½ சவரன் தங்க நகைகள், 2 வெள்ளிக்கொலுசுகள், 256 வெளிநாட்டு நாணயங்கள், 1 ஆப்பிள் ஐ-பேடு, மற்றும் 1 செல்போன் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. உடனே, சங்கீதா இது குறித்து P-3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
P-3 வியாசர்பாடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.R.பிரான்வின் டேனி தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.T.வானமாமலை, தலைமைக் காவலர்கள் V.குப்புசாமி (த.கா.20975), M.மலைவேல் (24325), முதல் நிலைக்காவலர்கள் G.அய்யனார் (மு.நி.கா.31747) மற்றும் M.P.K.சுரேஷ்குமார் (மு.நி.கா.36538) ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், அதில் பதிவான குற்றவாளிகளின் அடையாளங்களை கொண்டு மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளான 1.முருகன் (எ) சுருட்டை முருகன், வ/33, த/பெ.கன்னியப்பன், எண்.32, எம்.ஜி.ஆர் நகர் முதல் தெரு, உள்ளகரம், மடிப்பாக்கம் 2.ஆகாஷ், வ/21, த/பெ.பாஸ்கர், எண்.5, எம்.ஜி.ஆர் நகர், அயப்பாக்கம் ஆகிய இருவரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 9 இருசக்கர வாகனங்கள், 1 ½ சவரன் தங்க நகை, 2 வெள்ளி கொலுசுகள், 1 செல்போன், 256 வெளிநாட்டு நாணயங்கள், 1 செல்போன் மற்றும் ஆப்பிள் ஐ-பேடு பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி குற்றவாளிகள் இருவரும் சேர்ந்து சென்னையில் பல்வேறு பகுதிகளில் திருட்டு மற்றும் இருசக்கர வாகன திருட்டு குற்றங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட முருகன் (எ) சுருட்டை முருகன் மீது பல்லாவரம், மடிப்பாக்கம், பழவந்தாங்கல், தாம்பரம், பள்ளிக்கரணை பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய குற்றத்திற்காகவும், இருசக்கர வாகனங்களை திருடிய குற்றத்திற்காகவும் 61 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையிலுள்ளதும், மற்றொரு குற்றவாளியான ஆகாஷ் மீது T-5 திருவேற்காடு மற்றும் T-10 திருமுல்லைவாயல் காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த P-3 வியாசர்பாடி காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.
******