காவலர் குடும்ப முன்னேற்றத்திற்காக புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர் குடும்ப சுயதொழில் மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.

Loading

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால் அவர்கள் உத்தரவின்பேரில், காவல் ஆளிநர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் காவல் ஆணையாளர் அவர்கள் காவலர் குடும்பத்தினர்க்காக, காவல் ஆளிநர்களின் 139 குழந்தைகளுக்கு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடப்பிரிவில் சேர்க்கை அனுமதி, பணியின்போது உயிரிழந்த காவல் ஆளிநர்களின் குழந்தைகளுக்கு ரூ.10 லட்சத்திற்கும் மேலான கல்வி உதவி தொகை, காவல் ஆளிநர்களின் பிறந்த தினத்தன்று வாழ்த்து கடிதத்துடன் குடும்பத்துடன் கொண்டாட விடுமுறை, காவலர்கள் குடியிருப்பில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு சீரான பராமரிப்பு, சுகாதார கூடுதல் அடிப்படை வசதிகள், தரமான குடிநீர், வளாக தூய்மை, மற்றும் அழகுபடுத்துவதற்கு உதவி வழங்கி நடவடிக்கையுடன், காவலர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கும் வகையில், காவலர் மருத்துவமனைக்கு புதிய மருத்துவ உபகரணங்கள், புதிய ஆம்புலன்ஸ் வாகனம், காவலர்கள் குடும்பத்தினர் நிகழ்ச்சிகள் நடத்த காவலர் குடியிருப்பு வளாகத்திலே சமூகநலகூடங்கள் அமைத்தும், காவலர்களின் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் குழந்தைகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு பணி ஆணை வழங்கப்பட்டும், புதுப்பேட்டை மற்றும் நரியங்காடு காவலர் குடியிருப்புகளில் காவலர்களின் குடும்பத்தினர் பயன்பாட்டுக்கு உடற்பயிற்சி அமைப்புகளுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைத்தும், பணியில் உயிர் நீத்த காவலர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் உடனடியாக வேலைவாய்ப்பு வழங்கியும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் ஆலோசனையின்பேரில், காவலர் குடும்பத்திற்காக சுய தொழில் செய்ய பயிற்சி அளிக்கும் திட்டம் நடைமுறைபடுத்தும் பணி நடைபெற்று வந்தது.இதன் தொடர்ச்சியாக, புதுப்பேட்டை, ஆயுதப்படை குடியிரப்பு வளாகத்தில் ‘‘காவலர் குடும்ப சுயதொழில் மையத்தை‘‘ (Self Employee Centre for Police Family) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப,. அவர்கள் துவக்கி வைத்தார்.

இம்மையத்தில் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளர் திரு.சந்திரன் என்பவர் வழங்கியுள்ள ரூ.3,75,000/- மதிப்புள்ள 25 தையல் இயந்திரங்களை கொண்டு, காவலர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு இந்தியாவின் பெரிய பைகள் தைக்கும் நிறுவனமான திருப்பூர் SSM & CO நிறுவனத்தின் மூலம் தையல் பயிற்சி வழங்கப்பட்டும் மற்றும் புதிதாக இணைபவர்களுக்கும் இப்பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும், இந்த சுயதொழில் மையத்தில் இணைந்து தயாரிக்கும் பைகள் மற்றும் பொருட்களை வெளி நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படையின் நல மையங்களான பல்பொருள் அங்காடி, உணவு விடுதி, கூட்டுறவு பண்டக சாலை, காய்கறி அங்காடிகளுக்கு அனுப்பி, அதன் வருவாயைக் கொண்டு, இங்கு பணிபுரியும் பெண்களுக்கு தகுந்த ஊதியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஏ.அமல்ராஜ், துணை ஆணையாளர்கள் திரு.கே.சௌந்தராஜன் (ஆயுதப்படை) திரு.எஸ்.கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் காவலர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

******

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *