திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று (07.01.2021) திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலம் 17.01.2021 அன்று நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பொ. இரத்தினசாமி, உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி. கிரண் ஸ்ருதி, இ.கா.ப., இணை இயக்குநர் (நலப் பணிகள்) மரு. கண்ணகி, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு. அஜிதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. அமித்குமார், இ.ஆ.ப. மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.