படிப்பிற்கு வறுமை தடையில்லை சாதிக்க துடிக்கும் ஏழை வாலிபர்.. பேருந்து நிலைய நடை பாதையில் அமர்ந்து தேர்வு எழுதிய வாலிபர்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை அடுத்த விழுந்தயம்பலம் என்ற கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான அரிசந்திரன்,தங்கம்மாள் தம்பதியரின் இளைய மகன் ரமேஷ் (29) வயதான இவரின் இரண்டு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகளுக்கு திருமணமான நிலையில் வறுமையிலும் வயதான நிலையிலும் பெற்றோர் பனிரெட்டாம் வகுப்பு வரை ரமேஷ் ஐ படிக்க வைத்துள்ளனர் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ரமேஷ் தமிழ் மொழி மீது கொண்ட பற்றால் தன்னை பி.ஏ., தமிழ் பட்ட படிப்பில் சேர்க்க தனது பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் உதவி கேட்டுள்ளார் ஆனால் யாரும் அவர் மேல்படிப்பு படிக்க உதவி செய்ய முன் வராத நிலையில் தனது நண்பர்களின் உதவி மற்றும் சிறு சிறு வேலைகள் செய்து சேமித்து வைத்திருந்த பணம் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து பி.ஏ தமிழ் மூன்று வருட பட்ட படிப்பை முடித்துள்ளார் தொடர்ந்து எம்.ஏ தமிழ் படிக்க போதிய பொருளாதார வசதி இல்லாத நிலையில் மீண்டும் கூலி வேலைக்கே சென்றுள்ளார் குடும்பத்தாரும் கண்டு கொள்ளாத நிலையில் நாடோடி வாழ்கையாக நாட்கள் கடந்து செல்ல ஓடி ஓடி உழைத்து சேமித்த பணத்தால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அதே கல்லூரியில் எம்.ஏ தமிழ் மேற்படிப்பிற்கு சேர்ந்து படிப்பை தொடர்ந்துள்ளார் இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் முதலாமாண்டு எம்.ஏ முதல் செமஸ்ட்டரில் கவிதை மற்றும் நாடகம் என்ற பாட பிரிவில் தோல்வி அடைந்துள்ளார் இதனையடுத்து அந்த பாட பிரிவை தேர்வு எழுதி வெற்றி பெற முயற்சி செய்த போது கொரோனா காலகட்டம் தடையை ஏற்படுத்தியதோடு தன்னிடம் ஆண்லைன் மொபைல் வசதியும் இல்லாததால் துவண்டு போன அவர் பலரிடம் உதவியும் கேட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அரியர் தேர்வை ஆண் லைனில் எழுதலாம் என கல்லூரிகள் அறிவித்து அதற்கான தேதியை வெளியிட்டது. இதையறிந்த ரமேஷ் தேர்வு கட்டணத்தை செலுத்தியுள்ளார் ஆண் லைன் தேர்வு இன்று நடைபெறும் நிலையில் அதற்கான ஸ்மார்ட் போண் மற்றும் இணைய வசதிகள் தன் கையில் இல்லாத நிலையில் நேற்று தக்கலை வந்த ரமேஷ் முட்டைக்காடு பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவர் உதவியுடன் கேள்வி தாள்களை பதிவிறக்கம் செய்ததோடு தக்கலை பேருந்து நிலைய நடைபாதையிலேயே அமர்ந்து நண்பரின் செல்போண் உதவியுடன் பரபரப்பாக ஆன் லைன் தேர்வை எழுதினார். இதை கண்ட பொதுமக்கள் அவரை வியப்போடு பார்த்து சென்றனர் பின்னர் அவரிடம் கேட்டப்போது ஏழ்மையான குடும்பத்தில் இளைய மகனாக பிறந்த தன்னை படிக்க வைக்க குடும்பத்தார் யாரும் முன்வராத நிலையில் படித்தே ஆக வேண்டும் என்ற வெறியில் பி.ஏ பட்ட படிப்பை முடித்ததாகவும் தற்போது எம்.ஏ பட்ட படிப்பை முடித்தவுடன் தமிழில் டாக்ட்ரேட் பட்டம் பெறுவதே நோக்கம் எனவும் ஆதங்கத்துடன் உருக்கமாக தெரிவித்தார்..