தேனியில் தமிழ்நாடு அரசு பணியில் பணியாற்றும் முன்னாள் முப்படை இராணுவத்தினர் சார்பில் மாநில பொதுக்குழுக் கூட்டம் இன்று தேனி மதுரை ரோட்டில் உள்ள முன்னாள் முப்படை ராணுவ அலுவலகத்தில் நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனியில் தமிழ்நாடு அரசு பணியில் பணியாற்றும் முன்னாள் முப்படை இராணுவத்தினர் சார்பில் மாநில பொதுக்குழுக் கூட்டம் இன்று தேனி மதுரை ரோட்டில் உள்ள முன்னாள் முப்படை ராணுவ அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்தில் மாநில தலைவர் செல்லப்பாண்டி செயலாளர் மாரியப்பன் பொருளாளர் சின்னசாமி மற்றும் கௌரவ ஆலோசகர் தேனி மாவட்ட துணை ஆட்சியர் ரெங்கநாதன் மற்றும் தேனி மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் நல உதவி இயக்குனர் ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.சங்கத்தில் மாநில அமைப்புச் செயலாளராக கனகராஜ் (வணிகவரித் துறை) மற்றும் பரப்புரைச் செயலாளராக கருப்பையா (கருவூலகம் )தேர்வு செய்யப்பட்டனர்.தாய் நாட்டிற்காக முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ராணுவத்தினர்கள் மாநிலத்திலுள்ள பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களில் 20 ஆண்டுகள் குடும்பங்களைப் பிரிந்து பணிபுரிந்துள்ளனர். ஆகையால் தற்போது தமிழ்நாட்டில் உள்ள தங்களது சொந்த மாவட்டங்களில் பணி மூப்பு இழப்பின்றி பொது மாறுதல்கள் வழங்க தமிழக அரசு ஆவன செய்யுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்திற்கு முழு ஆதரவு அளிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மற்ற மாநிலங்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பள சலுகைகள் தமிழகத்திலும் உள்ள முன்னாள் ராணுவ அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.