ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் செயல்படும்.ஜவ்வாது மலை பழங்குடியின உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்…

Loading

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியம், கோவிலூர் ஊராட்சி, ஜமுனா மத்தூர், (06,01,2021) அன்று தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக ஜவ்வாது மலை வாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ், 2019- 2020 ஆம் ஆண்டு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் சாமை, அரிசி, தேன், மிளகு, புளி, ஆகிய பொருள்கள் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் ஜவ்வாது மலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர், நிறுவனத்தின் செயல்பாடுகளை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களுடன் நேரில் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டார், ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்,பா, ஜெயசுதா, ஜவ்வாதுமலை பிரதிநிதிகள் உடன் இருந்தனர், மேலும் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் 2019- 2020, ஆம் ஆண்டு ரூபாய் 35 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் ஜவ்வாது மலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தினை செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் ஜவ்வாது மலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலகத்திலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருள்கள் சந்தை படுத்தும் விற்பனை வாகனத்தை கொடியசைத்து இயக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜமுனா மத்தூரில் சுற்றுலா பயணிகள் அதிகம் பார்வையிட வரும் ஜமுனா மத்தூர் படகுசவாரி குளம். சிறுவர் பூங்கா. பீமன் நீர்வீழ்ச்சி. மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா. ஆகிய பகுதிகளுக்கு. செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் வசதிகள் மேற்கொள்வதற்கும் கூடுதல் சுற்றுலாபயணிகள் ஈர்ப்பதற்கும் தேவையான வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கேட்டுக்கொண்டார். பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டுவரும் சாமை அரவை உற்பத்தி அழகு ரூபாய் 24 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும், தேன் பதப்படுத்தும் அழகு ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் செயல்பட்டு வரும் புளி பிரித்தெடுக்கும் அழகு ஆகிய இடங்களில் செய்த அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து அத்திப்பட்டி பகுதியில் ரூபாய் 92 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும். சாமை. அரிசி. தேன். புளி .ஆகிய உற்பத்தி அலகுகளின் ஒருங்கிணைந்த வளாகம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து அதனை பணிகளையும் விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கோவிலூர் ஊராட்சி. கீழூர் கிராமத்தில் பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில். ராதாகிருஷ்ணன்.த/பெ. வெள்ளையன் என்பவரது இடத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Attachments area

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *